மயிலாடுதுறை: ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறால் பொருட்கள் வினியோகம் பாதிப்பு

மயிலாடுதுறை: ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறால் பொருட்கள் வினியோகம் பாதிப்பு
X

மயிலாடுதுறை ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறால் மக்கள் அவதி அடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறால் பொருட்கள் வினியோகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுகாக்களில் உள்ள ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி பயோமெட்ரிக் முறையில் பொதுமக்களின் கைரேகையை பதிவு செய்து அதன் பிறகு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தும் சர்வரில் நேற்று முதல் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடைகளுக்கு வந்த பொதுமக்கள் பொருட்களை வாங்க முடியாமல் கடை வாசலிலேயே நீண்ட நேரம் காத்து இருந்தனர். அவர்களை ரேஷன் கடை ஊழியர்கள் திருப்பி அனுப்பி வந்தனர். ஆன்லைன் சர்வர் கோளாறு காரணமாக கடைகள் திறந்திருந்தாலும் எடை போட்டு பொருட்களை விற்பனை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வேலைக்குச் செல்லாமல் ரேஷன் பொருட்கள் வாங்க வந்த கூலித் தொழிலாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள். உடனடியாக சர்வர் கோளாறை சரிசெய்து ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்று பிரச்சினை ஏற்படும்போது பொதுமக்களை அலைக்கழிக்காமல் ரேஷன் பொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்ப அட்டைதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!