மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேச நிகழ்ச்சி..!
தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழாவில் தங்க பாத குறடுடன், வெள்ளி நாற்காலி பல்லக்கில் தருமபுர ஆதீன மடாதிபதி,வடக்கு குரு முகூர்த்த ஆலயங்களுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழாவின் ஒரு பகுதியாக தங்க பாத குறடுடன், வெள்ளி நாற்காலி பல்லக்கில் தருமபுர ஆதீன மடாதிபதி,வடக்கு குரு முகூர்த்த ஆலயங்களுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.
அந்த ஆலயத்தில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 20ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. நாளை பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் மடத்தில் சித்தியடைந்த முந்தைய ஆதினங்கள் 15 பேரின் (சமாதி அடைந்த இடத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு கோயில்கள் உருவாக்கப்பட்ட இடமான) குரு முகூர்த்தங்கள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காவிரிக்கரையில் ஆதீனத்திற்கு வடக்கு புறத்தில் எழுந்துள்ள இந்த இடத்திற்கு வடக்கு குரு முகூர்த்தம் என்று பெயர். தொடர்ந்து இங்கு பூஜை செய்ய, பாரம்பரியமான முறைப்படி கட்டளை தம்பிரான்கள் புடைசூழ, தங்க பாத குறடுடன், வெள்ளி நாற்காலி பல்லக்கில் தருமபுர ஆதீனம் இருபத்தி ஏழாவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் குரு முகூர்த்தத்திற்கு எழுந்தருளினார்.
இதற்காக மடத்திலிருந்து ஒட்டகம் யானை குதிரை முன்னே செல்ல மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக வெள்ளி நாற்காலி பல்லக்கில் குரு மூர்த்தங்களுக்கு ஆதீன மடாதிபதி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அடுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். ஒவ்வொரு முகூர்த்த ஆலயத்திலும் அந்தந்த மடாதிபதிகளின் வாழ்க்கை வரலாறு விளக்கிக் கூறப்பட்டது.
செய்தி : மயிலாடுதுறை கனி
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu