கொரோனா தடுப்பூசி முகாம் திமுக எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கொரோனா தடுப்பூசி முகாம் திமுக எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
X
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோனேரிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை. திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பரவலின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர குத்தாலம் தாலுக்கா கோனேரிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் வயது முதிர்ந்தோர், இளைஞர்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது 10 வயது சிறுவன் கொரோனா நிவாரண நிதிக்காக தான் சேமித்து வைத்திருந்த 500 ரூபாய் பணத்தை பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா முருகன் அவரிடம் வழங்கினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!