/* */

கொரோனா தடுப்பு பணிகள் ஊராட்சித் தலைவர்களுடன் ஆலோசனை

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஊராட்சி தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பு பணிகள்  ஊராட்சித் தலைவர்களுடன் ஆலோசனை
X

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் கொரோனா தடுப்பு பணிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பேசும்போது கூறுகையில் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது . தடுப்பூசிகள் மையம் அமைக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்,

ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து மக்களும் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். இதேபோல குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் கூட்டத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்

Updated On: 20 May 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை