உசிலம்பட்டி அருகே ஊராட்சி துணைத் தலைவர் கடையில் திருட்டு
மதுரை உசிலம்பட்டிஅருகே, விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றத்தில் துணைத்தலைவராக இருப்பவர் செல்வி செல்வம் . இவர், இங்கு உள்ள கருப்புகோவில் அருகே பேன்சிகடை வைத்துள்ளார். இவர் கடைக்கு, விக்கிரமங்கலம் அருகே கோவில் வேலை செய்வதற்காக வந்துள்ளதாக ஒரு பெண் இவரிடம் நட்பாக பழகி உள்ளார்.
மூன்று நாட்களுக்கு மேலாக இவரது கடையில் பொருட்கள் வாங்கி செல்வது போல் பழகி, உரிமையாக பேசியுள்ளார். இதை வைத்து செல்வி செல்வம் இவரின் மேல் நம்பிக்கை வைத்து கடைக்குள் அனுமதித்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று அந்த பெண் கடைக்கு உள்ளே வந்து நோட்டமிட்டு, இவர்கள் நகை மற்றும் பணம் வைத்திருந்ததை பார்த்துள்ளதாக தெரிகிறது. பின்னர் செல்விசெல்வம் அசந்த நேரம் பார்த்து கடையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 9 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கடையின் மற்றொரு வழியாக அந்த பெண் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, செல்விசெல்வம் தனது கடையில் ஒன்பது லட்சம் ரூபாய் திருடு போனதாக விக்கிரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இது குறித்து, காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறார். மேலும் , கடையில் அருகில் இருந்த கண் காணிப்பு கேமரா அடிப்படையில், பணம் திருடி பெண்ணின் அங்க அடையாளங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
மேலும், தனிப்படை அமைத்து மர்ம பெண்ணை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். இவரது கடை அருகே உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்.ல் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
விக்கிரமங்கலம் பகுதியில் பட்ட பகலில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கடையில் 9 லட்சம் ரூபாய் பணம் திருடிய சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu