உசிலம்பட்டி வட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகள்
கொள்முதல் நிலையங்களில் தேங்கும்நெல் குவியல்கள் சேதமடையும் நிலை குறித்து விவசாயிகள் கவலை தெரிவித்தனர்
கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல்லை இடைத்தரகர்கள் மூலம் வெளிமாவட்ட வியாபாரிகள் கொள்முதல் செய்ய வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், விக்கிரமங்கலம் பகுதியில் நெல் அறுவடைக்கு முன்பாகவே நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வியாபாரிகள் நெல்லை வாங்குவதாக இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்தப் பகுதியில் பருவமழை காலத்திலும் மற்ற நேரங்களில் கிணற்றுப்பாசனம் மூலம் நெல் நடவு நடைபெற்று இன்னும் சில நாட்களில் நெல் அறுவடை செய்யதயாராக இருக்கும் சூழ்நிலை உள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே அரசியல்வாதிகள் துணையுடன் அதிகாரிகள் இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து வியாபாரிகளின் நெல்லை வரவழைத்து கொள்முதல் செய்கின்றனர். இதனால் ,அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் , இப்பகுதியில் விளையும் அட்சயா நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றும் கூறுகின்றனர்.நெல் அறுவடைக்கு முன்பாக கொள்முதல் நிலையம் அமைப்பதால், வெளிமாவட்ட வியாபாரிகள் வந்து உள்ளூர் விவசாயிகள் போல் நெல்லைபோட்டு விட்டுச் செல்கின்றனர். இதனால், இப்பகுதியில் நெல் அறுவடை காலத்தில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாத சூழ்நிலை ஏற்படும் நிலை உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு ,மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், மேலும் ஒரு மூடை நெல் 1400 க்கு வாங்கி மதுரை மார்க்கெட்டில் 1800க்கு விற்று அதிக லாபம் சம்பாதிப்பதாகவும் சில அரசியல்வாதிகள் அதிகாரிகளின் துணையுடன் இந்த செயலை செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இப்பகுதியில் தீரவிசாரித்து, முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu