மதுரை- பூட்டியிருந்த வீடுகளில் திருடிய அண்ணன், தம்பி கைது

மதுரை- பூட்டியிருந்த வீடுகளில் திருடிய அண்ணன், தம்பி கைது
X
மதுரை புறநகர் பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளில் நகைகள், பணம் திருடிய இருவர் கைது.

மதுரை புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து பணம் நகைகளை திருடிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து, 110 சவரன் நகை, ரூ.50,000 ரொக்க பணம் பறிமுதல் செய்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனையின் பேரில், தனிப்படையும் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையால், பூட்டியிருந்த வீடுகளில் திருடியதாக அண்ணன், தம்பி இருவரையும் கைது செய்து, போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!