மதுரை மாவட்ட கிரைம் செய்திகள்: காவல் துறையினர் விசாரணை..!
மதுரை க்ரைம் செய்திகள் (பைல் படம்).
பழைய நத்தம் ரோட்டில்தனியார் நிறுவன ஏஜென்சியில்சுவர் ஏறி குதித்து முப்பதாயிரம் மதிப்புள்ள டீ,காப்பி தூள் பாக்கெட்டுகள் திருட்டு : முன்னாள் ஊழியர் கைது
மதுரை :
பழைய நத்தம் ரோட்டில் தனியார் நிறுவன ஏஜென்சி குடவுனில் சுவர் ஏரி குதித்து ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள டீ , காப்பித்துள் பாக்கெட்டுகள் திருடிய முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்தவர் சேவியர் அந்தோணி ராஜசேகர்68. இவர் மதுரை பழைய நத்தம் ரோட்டில் தனியார் நிறுவன ஏஜென்சியின் குடவுன் பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார் .இவர் 18 வருடங்களாக இந்த குடவுனின் பொறுப்பாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் இரவு குடவுனை மூடிவிட்டுச் சென்று மறுநாள் வந்து பார்த்தபோது அங்கு நிறுவப்பட்டிருந்த சிசிடிவி கேமரா சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் கடையில் உள்ள ஸ்டாக்குகளை சரிபார்த்தனர்.அப்போது ரூ 30 ஆயிரம் மதிப்புள்ள டீ தூள் காபித்தூள் பாக்கெட்டுகள். திருடப்பட்டது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து மற்ற சிசிடிவி கேமராவை அவர்கள் ஆய்வு செய்தனர்.அதில் முன்னாள் ஊழியர் கிருஷ்ணாபுரம் காலனி மூக்கன் மகன் தென் பாலமுருகன் 23 என்ற வாலிபர் சுவர் ஏறி குதித்து திருடிச்சென்றது பதிவாகி இருந்தது.
அவருடன் ஐயர் பங்களா காவேரி எட்டாவது தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ஹரிஹரன் 19 என்பவரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து சேவியர் அந்தோணி ராஜசேகர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தென் பாலமுருகன், ஹரிஹரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவனியாபுரத்தில், கையில் வாளுடன் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்த வாலிபர் கைது :வால் பறிமுதல்
மதுரை
அவனியாபுரம்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி. இவர் போலீசாருடன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார் .அவர் அவனியாபுரம் பைபாஸ் ரோடு பெருங்குடி வெள்ளக்கல் ரோடு சந்திப்பருகே சென்ற போது வாலிபர் ஒருவர் கையில் நீண்ட வாளுடன் பொது மக்களை மிரட்டிக் கொண்டிருந்தார்.
இதை கண்ட போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர் .அந்த வாலிபர் பிரபல ரவுடி என்றும் அவனியாபுரம் வள்ளல் ஆனந்தபுரம் நீலமேகம் மகன் காளீஸ்வரன் 33 என்றுதெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த வாளையும் பறிமுதல் செய்தனர்.
ஜெய்ஹிந்த்புரத்தில், பணம் வைத்த சூறைய 8 பேர் கைது : பணம் பறிமுதல்
மதுரை
ஜெயந்த்புரம் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அம்பேத்கர் நகர் வீரகாளியம்மன் கோவில் பின்புறம் சென்றபோது 8 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து உள்ளே வெளியே வெட்டுச்சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.பிடிபட்ட நபர்களிடம் விசாரித்த போது ஜீவாநகர் முதல்தெரு நஷ்ருதீன் என்ற நதீன் 39, கார்த்திக் 24, முத்துவேல் 35, சக்திவேல் 34, ராஜா 40, காஜா 19, பழனிச்சாமி 38, வெங்கடேசன் 52 என்று தெரியவந்தது .அவர்கள் எட்டு பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து பணம் ரூபாய் 1150ஐ பறி முதல் செய்தனர்.
மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற போக்சோ கைதி திடீர் சாவு: போலீஸ் விசாரணை .
மதுரை :
மதுரை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி திடீரென்று உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட வர் மருது வீரன் என்ற மதுரை வீரன் 50 .இவர் 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு 2022 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். இவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது.
அவருக்கு சிறை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இது குறித்து சிறை அதிகாரி முனிஸ்திவாகர் அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu