சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ. நினைவேந்தல் நிகழ்ச்சி..!

சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ. நினைவேந்தல் நிகழ்ச்சி..!
X

முன்னாள் எம்.எல்.ஏ. நினைவேந்தல் நிகழ்ச்சி.

முன்னாள் எம்எல்ஏ சந்தானத்தின் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக அதிமுக பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

சோழவந்தான்:

சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி தொகுதியில் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் எல்.சந்தானம்.இவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்திய பொறுப்பிலும்,மாநில பொறுப்பிலும் பதவி வகித்தவர் ஆவார். உசிலம்பட்டி தாலுகா விக்கிரமங்கலம் அருகே மேலபெருமாள்பட்டி கிராமத்தில் எல்.சந்தானம் பிறந்தார்.இவரது ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நேற்று மேலபெருமாள்பட்டி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடந்தது.

இவரது மகன்கள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் நிர்வாகிகள் கள்ளர்கல்விக் கழக தலைவர் பாலகிருஷ்ணன்,முன்னாள் செல்லம்பட்டியூனியன் தலைவர் இளங்கோ மற்றும் குடும்பத்தினர் சாந்தி, பாண்டிஜோதி,சரோஜினி உள்பட பேரக்குழந்தைகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பூஜைகள் செய்தனர்.

இதில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பன்னியான் ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன் திமுக ஒன்றிய செயலாளர் சுதாகரன், உசிலம்பட்டி நகர செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் வாலாந்தூர் பார்த்திபன் சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டி அதிமுகஒன்றிய செயலாளர் ராஜா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் முன்னாள் எம்எல்ஏ கதிரவன், மதுரை மேற்கு மாவட்ட இளைஞரணி எல்.எஸ்.பி. விக்னேஷ், டாக்டர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ,விக்கிரமங்கலம் கலியுகநாதன், பனாமூப்பன்பட்டி மகாராஜன், சக்கரப்பநாயக்கனூர் ஜென்சிராணி, உள்பட பலர் சந்தானம் நினைவிடத்தில் மாலை வைத்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இப்பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Next Story