உசிலம்பட்டி அருகே மலையடிவாரத்தில் இறந்து கிடந்த கரடி: வனத்துறை விசாரணை

உசிலம்பட்டி அருகே மலையடிவாரத்தில் இறந்து கிடந்த கரடி: வனத்துறை விசாரணை
X

சடையாண்டிபட்டி மலையடிவாரத்தில், இறந்து கிடந்த கரடி.

உசிலம்பட்டி அருகே, மலை அடிவாரத்தில் இறந்து கிடந்த கரடியை, வனத்துறை அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சடையாண்டிபட்டி மலை அடிவாரம் உள்ளது. இப்பகுதியில், கரடி ஒன்று இறந்து கிடப்பதாக உசிலம்பட்டி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள், இறந்து கிடந்த கரடியை, பரிசோதனை செய்து பார்த்தனர். கரடியின் இறப்புக்கு பசி காரணமா, அல்லது யாராவது தாக்கினார்களா என்பது, ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனை செய்த பின்னர், அருகில் உள்ள மலையடிவாரத்தில் கரடியை அடக்கம் செய்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!