திருப்பரங்குன்ற கிரிவல பாதையில் இளைஞர் கொலை: போலீசார் விசாரணை

திருப்பரங்குன்ற கிரிவல பாதையில் இளைஞர் கொலை: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

திருப்பரங்குன்ற கிரிவல பாதையில் இளைஞரை கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே நிலையூரைச் சேர்ந்தவர் விருமாண்டி மகன் மணிகண்டன் (27வயது). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், குடித்துவிட்டு தென்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு போதையில் படுத்து உறங்கியுள்ளார்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவர் படுத்திருப்பதை அறிந்து அவர் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்றனர். போதையில் இருந்த மணிகண்டனுக்கு கழுத்து அறுபடுவதை அறிந்தவுடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்று அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றவுடன் அவர் சுயநினைவை இழந்து மயங்கிய நிலையில் தென்பரங்குன்றம் நடுரோட்டில் சரிந்து விழுந்து உள்ளார்.

இத்தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பரங்குன்றம் காவல்துறையினர் மணிகண்டன் உடலை கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மணிகண்டன் கொலையில் முன்பகையா, அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாமா என திருப்பரங்குன்றம் போலீஸார் கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தைப்பூசம், கிரிவலம் ஆகியவை என பக்தர்கள் கிரிவலம் சுற்றி வரும் பாதையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதால் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கும், திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள மக்களுக்கும் இது பெரும் அதிர்ச்சியை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்