நகர்புற வளர்ச்சியில் ஆண்டுதோறும் முன்னேற்றம் ஏற்படும்: ஆணையர் தகவல்

நகர்புற வளர்ச்சியில் ஆண்டுதோறும் முன்னேற்றம் ஏற்படும்:  ஆணையர் தகவல்
X
மதுரை மாவட்டம், வளர்ச்சியடையும் போது மாநிலம் வளர்ச்சி அடையும். மாநிலம் வளர்ச்சி அடையும் போது இந்தியா வளர்ச்சி அடையும்

மதுரையின் வளர்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்றம் ஏற்படும் என்று நகர்ப்புற வளர்ச்சி ஆணைய உறுப்பினர் தெரிவித்தார்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 99 -ஆவது ஆண்டின் ஐந்தாவது செயற்குழு கூட்டம், சங்கத் தலைவர் டாக்டர் ஜெகதீசன் தலைமையில் வர்த்தக சங்க மெப்கோ சிற்றவை அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் சரவணன் உரையாற்றிய போது, கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் ரூரல் டெவலப்மென்ட் ஏற்படவில்லை. மதுரை மாவட்ட வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமாகும்.

மாவட்டத்தில் தொழில்துறை வளர்ச்சி மிகவும் அவசியமாகும். மதுரைக்கு போட்டியாக சென்னை, கோவை உள்ளது. மற்ற நகரங்களின் வளர்ச்சிக்கு அடித்தளம் மிகவும் முக்கியமாகும். இதற்காகவே, மதுரையில் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் முயற்சிகளும் அதன் செயலாக்கமும் மிகவும் அவசியத் தேவையாகிறது. சமீபத்தில் மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் மதுரையை பார்வையிட்டு இருக்கிறார். மதுரை சார்ந்து அதன் வளர்ச்சியை துரிதப்படுத்துவது விரைவாக வேகப்படுத்துவது ரூரல் டெவலப்மென்ட் அத்தாரிட்டியின் நோக்கமாகும்.

பாசிட்டிவ் திசையை நோக்கி இது செல்கிறது .அர்பன் டெவலெப்மெண்ட் அத்தாரிட்டியினுடைய செயல்பாடு துவங்கியவுடன் ஒவ்வொரு ஆண்டும் மதுரையின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே இருக்கும். மதுரை மாவட்டம், வளர்ச்சியடையும் போது மாநிலம் வளர்ச்சி அடையும். மாநிலம் வளர்ச்சி அடையும் போது இந்தியா வளர்ச்சி அடையும் என்றார் அவர்.

ஊரக வளர்ச்சித்துறையின் செயல்பாடுகள்... மக்கள் நலத்தைப் பேணுகின்ற மாநிலமான தமிழகத்தில், அரசின் முயற்சிகள் அனைத்தும் ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களின், சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்தை நோக்கியே அமைந்துள்ளன. கிராமப்புறங்களில் மக்கள் பங்கேற்புடன் கூடிய சமூக, பொருளாதார வளர்ச்சியே ஊரக வளர்ச்சியின் நோக்கமாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஊரக வளர்ச்சி என்பது அடிப்படை வசதிகளையும், தரமான சேவைகளையும் சிறந்த முறையில் கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.ஊரக பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, சமுதாயத்திற்கு தேவையான சேவைகளை அளிப்பது, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது போன்றவையே அரசின் அடிப்படை நோக்கமாகும்.

வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற மக்களுக்குத் தரமான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஊரக வளர்ச்சித் திட்டங்கள் அமைகின்றன. இந்த அரசின் தொடர் முயற்சிகள், வறுமையை ஒழித்துத் தரமான வாழ்விற்குத் தேவையான அடிப்படைகளை நிர்ணயம் செய்யும். பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துதல், வறுமை ஒழிப்பிற்கு முக்கியத்துவம் அளித்தல, அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சியின் குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளாக கொண்டு செயல்படுகிறது.


Tags

Next Story
குமாரபாளையம் பள்ளியில் முன்னாள் மாணவர்களின் உதவி: 40 நாற்காலிகள் வழங்கும் விழா