மதுரையில் உலக மகளிர் தின கொண்டாட்டம்: சின்னத்திரை நடிகையர் பங்கேற்பு

மதுரையில் உலக மகளிர் தின கொண்டாட்டம்: சின்னத்திரை நடிகையர் பங்கேற்பு
X

காளவாசலில் நடைபெற்ற மகளிர் தினவிழாவில் பங்கேற்ற சின்னத்திரை நடிகை, நடிகர்கள். 

மதுரையில், தென்னிந்திய தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில், உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

தென்னிந்திய தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் காளவாசல் அருகில், பாத்திமா நகரில், உலக மகளிர் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சின்னத்திரை நடிகை ஜெயந்தி தலைமையிலும், நடிகர் சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான, சி.எம்.வினோத், குறும்பட இயக்குனரும் நடிகரும், சமூக சசேவகருமான டாக்டர் ஜெ.விக்டர் முன்னிலை வகித்தார்.

இதில், அப்பா பாலாஜி, மீசை தங்கராஜ், தங்கப்பாண்டி, நடிகைகள் அட்சயா, தேவகி, தேவயானி ராஜி (எ) ஹரணி, ஸ்ரீகலா, மல்லிகா, ராணி, சுமதி, பாண்டிச்செல்வி, மஞ்சு, கௌரி, சைலஜா, பாக்கியா, ஆண்டிப்பட்டி தனலட்சுமி, ஷாலினி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கேக் வெட்டி மற்றும் அனைவருக்கும் இனிப்பும் தேனீரும் வழங்கப்பட்டது. சங்க அலுவலக மேலாளர் பாலா, செய்தி தொடர்பாளர் செந்தில்நாதன் இணைந்து விழாவை ஏற்பாடு செய்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி