கிணற்றில் தவறி விழுந்த பெண்: பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

கிணற்றில் தவறி விழுந்த பெண்: பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
X

திருமங்கலம் அருகே, 40 அடி கிணற்றில் விழுந்த பெண்ணை, தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

மதுரை அருகே திருமங்கலத்தில், கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

மதுரை திருமங்கலம் தாலுக்கா, கீழ உரப்பனூர் அருகே உள்ள சமுதாயக்கூடம் பின்புறத்தில் 40 அடி கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் உசிலம்பட்டியை சேர்ந்த காசி மகள் ராஜேஸ்வரி, தவறி விழுந்தார்.

அவர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், இதுகுறித்து தகவல் அளித்ததன் பேரில், விரைந்து வந்த திருமங்கலம் தீயணைப்புத் துறையை சேர்ந்த, நிலைய அலுவலர் ஜெயராணி மற்றும் சிறப்பு அலுவலர் குமார் தலைமையிலான மீட்புக்குழுவினர், ராஜேஸ்வரியை உயிருடன் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை முயற்சி செய்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இன்றைய உலகம் எங்கு செல்கிறது? உலகின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் AI the future