பாஜகவின் 1 கோடி பேருக்கு வேலை வாக்குறுதி என்னாச்சு: அமைச்சர் மஸ்தான் கேள்வி
மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடந்த சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள்
ஒற்றுமையில் வேற்றுமை காண்பவர்களை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றார் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு:
மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது.
இதில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்று,147 பயனாளிகளுக்கு 18,55,520 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
விழா அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது : இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்தர்கள், ஜெயின் என20% சிறுபான்மையின மக்கள் வாழ்கின்றனர்.சமய வேறுபாடுகள் இந்தியாவில் தலைவிரித்து ஆடுவது போல் நிகழ் காலத்தில் வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை.சைவம் வைணவம் என பேசி அரசியல் ஆக்கி அதில் குளிர்காய கூடிய சூழல் அபத்தமானது ஆபத்தானது. அதை சிலர் செய்து வருகின்றனர்.
பல்வேறு வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. சிந்து சமவெளியில் ஊடுருவி ரிக், யஜுர், சாம உள்ளிட்ட 4 வேதங்கள் வழியாக சாதி, மதம் ஏற்றத் தாழ்வு சமூகமாக மாறியது. அனைத்து தெய்வங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள், புதிதாக வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள்.தற்போது, வெறுப்பை கக்கும் செயல் இந்த நாட்டில் நடைபெற்று இருக்கின்றன. அறம்,கருணை சார்ந்துதான் உலகம் கட்டமைக்க முடியும் நாட்டின் வளர்ச்சிக்கு நிதியும், அமைதியும் முக்கியம் என்றார்.
சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு:ஆரிய க்கூட்டம், சிறுபான்மையினரின் கல்விக்குத் தடைவிதிக்க சிறுபான்மையின பள்ளி மாணவர்களுக்கான நிதி உதவியை நிறுத்தி இருக்கிறது.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட போராட்டம் வழியாக மீண்டும் பெறப்பட்டது.சிறுபான்மையின மாணவர்களுக்கான நிதி உதவியை மீண்டும் வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
சிறுபான்மையின மாணவிகள் கல்வியை அதிகரிக்க மூன்றாம் வகுப்பு முதல் 6 வகுப்பு வரை பயிலும மாணவிகளுக்கு 500 ரூபாய் உதவித் தொகையும், அதற்கு மேல் படிப்பவர்களுக்கு 1000 ரூபாயும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழக அரசு செயல்பாடுக்ள் குறிப்பிட்ட கும்பலுக்கு எரிச்சல் ஏற்பட்டு இருக்கிறது.மத்தியில் இருப்பவர் ஏற்படுத்து பாதகத்தை சாதகமாக்குவது நமது கடமை என, முன்னாள் முதல்வர் கருணாநிதி சொல்வார் அதை போல் நாம் செயல்பட வேண்டும்.
சென்ற ஆண்டு மட்டும் மதுரை மாவட்டத்தில் மட்டும் 11 ஆயிரத்து 801 நபர் 3.5 கோடி நிதி உதவியை பெற்றனர். இந்த ஆண்டு அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மத்திய பாஜக அரசு மக்கள் விரோத அரசாக இருந்து கொண்டு மக்களின் பாதுகாவலர்கள் போல ஓர் மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
பாஜகவினர் 2014 முதல் 2022 மத்திய அரசில் மோடி ஆட்சியில் சாதனை சொல்லாமல் ஏன் இருக்கின்றனர். உங்கள் சாதனை பட்டிலை மக்களுக்குச் சொல்லுங்கள்.மத்தியில், பாஜக ஆட்சிக்கு வரும்போது கடன் 56 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது 133 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது இதுதான் உங்கள் நிர்வாகத் திறனா?.
தனி நபர் மீதான கடன் 44 ஆயிரத்தில் இருந்து 1.43 லட்சமாக மாறி இருக்கிறது.அதேபோல் ,ஆண்டுக்கு 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என உறுதி வழங்கி ஏமாற்றி உள்ளீர்கள் இதை ஏன் பாஜகவினர் பேசவில்லை என மக்கள் கேட்கிறார்கள்.கேட்பதையும் கேட்காததையும் கொடுக்கும் ஆட்சிதான் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி,யாருக்கும் அஞ்சாமல், அலட்சியம் காட்டாமல் சிறுபான்மையினர் நலன் சார்ந்து இயக்கும் ஆட்சி நமது ஆட்சி.
ஒற்றுமையில் வேற்றுமை காணும் அந்த கூட்டத்திற்கு நாம் செவி சாய்க்காமல், இடமளிக்காமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம்மை பிளவுபடுத்த நினைப்பவர்களை தேர்தலில் போட்டியிடும் அத்தனை இடத்திலும் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்றார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu