சேடப்பட்டி அருகே பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கும் விழா: ஆட்சியர் பங்கேற்பு

சேடப்பட்டி அருகே பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், மதுரை ஆட்சியர் பங்கேற்பு உதவிகளை வழங்கினார்.

மதுரை மாவட்டம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், ,மதுரை ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் வண்டப்புளி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், சாலையோரங்களில் மரம் நடும் பணியை, மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர் பார்வையிட்டார். பின்னர், இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காசோளத்திற்கு மருந்தடிக்கும் பணியினை, ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!