இணைப்பு பிரதான கால்வாயில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

இணைப்பு பிரதான கால்வாயில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
X
விக்கிரமங்கலத்தில் வைகை திருமங்கலம் இணைப்பு கால்வாயில் பாசனத்திற்காக இன்று காலை நீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் தொட்டி பாலத்தில் வைகை திருமங்கலம் இணைப்பு கால்வாயில் பாசனத்திற்காக இன்று காலை நீர் திறக்கப்பட்டது. இதனால் இந்த பகுதியில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக அணை மதகிற்கு பூஜை செய்து அணை நீரை பாசன கோட்டத் தலைவர் ராமன் திறந்து வைத்தார். பொதுப்பணித்துறை அதிகாரி செல்லையா, மதுரை மாவட்ட துணை சேர்மன் முத்துராமன், முதலைக்குளம் ஒன்றிய கவுன்சிலர் அரவிந்தன், முதலைக்குளம் ஊராட்சி மன்றதலைவர் பூங்கொடி பாண்டி, செக்கானூரணி கபி காசிமாயன், விக்கிரமங்கலம் மோகன், மூக்கன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நீரின் மூலம் சுமார் 36 மேற்பட்ட கண்மாய்க்கு உட்பட்ட பாசன பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!