/* */

சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு கவுன்சிலர்

சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை வார்டு கவுன்சிலர் தீர்த்து வைத்துள்ளார்.

HIGHLIGHTS

சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு கவுன்சிலர்
X

சோழவந்தானில் பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்கும் பணி நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட எட்டாவது வார்டு பகுதியான ரயில்வே பீடர் ரோடு பகுதியில் உள்ள குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி பழுதடைந்து 30 நாட்களுக்கு மேலாகியும், சரி செய்யாததால் குடிநீரின்றி பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடுமையான வெயில் காலம் தொடங்கிவிட்ட நிலையில் குடிநீருக்காக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வரும் நிலையில் முப்பது நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் இதுகுறித்து 8வது வார்டு பொதுமக்கள் வார்டு கவுன்சிலரான மருது பாண்டியனை நேரில் சந்தித்து முறையிட்டனர்.

உடனடியாக 10க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு பழுதடைந்த சின்டெக்ஸ் அடியில் உள்ள மோட்டார் பம்பினை வெளியில் எடுத்து சரி செய்யும் பணியினை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் இது போன்ற குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடி வருகிறது. பல இடங்களில் குடிநீர் மேல்நிலைத் தொட்டியை சுத்தம் செய்யாததால் குடிநீரில் மஞ்சள் கலந்து வருகிறது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டால் பொது மக்களின் கோரிக்கைக்கு முறையாக பதிலளிக்க மறுக்கிறார்கள். ஆகையால் வார்டு கவுன்சிலரை நேரில் சந்தித்து முறையிட்டோம். அதன் பின்பு பழுது அடைந்த சின்டெக்ஸை சரி செய்யும் பணியினை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Updated On: 30 April 2024 11:08 AM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  3. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  8. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  10. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...