மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி எதிராக ஒட்டப்பட்ட வால் போஸ்டர்

மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி எதிராக ஒட்டப்பட்ட வால் போஸ்டர்
X

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து , அனைத்து மறவர் கூட்டமைப்பினர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

இந்த போஸ்டரால் ஆர்.பி. உதயகுமார் சொந்த தொகுதியான திருமங்கலம் பகுதி அதிமுகவினர் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து , அனைத்து மறவர் கூட்டமைப்பினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு :

மதுரை மாவட்டம், திருமங்கலம் விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நான்கு வழி சாலைகளில், சாலையின் இரு புறமும் எடப்பாடி பழனிச்சாமியே எங்கள் பகுதிக்கு வராதீர் என்ற கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது . 20% இடஒதுக்கீட்டில் மறவர் , வலையர் உள்ளிட்ட 68 சீர் மரபு பழங்குடியினர் உட்பட 115 ஜாதியினரை புறக்கணித்து , குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் 10.5% சதவீத இட ஒதுக்கீடு கொடுத்த எடப்பாடியார் எங்கள் பகுதிக்கு வராதீர் என்ற கண்டன போஸ்டர் அனைத்து மறவர் கூட்டமைப்பு சார்பில் ஒட்டப்பட்டுள்ளது.

விருதுநகர் மற்றும் மதுரையில் நடைபெறும் பொது கூட்டத்திற்கு வரவுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்லும் வழி முழுவதும் இந்த எதிர்ப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் , ஆர்.பி. உதயகுமார் சொந்த தொகுதியான திருமங்கலம் பகுதி அதிமுகவினர் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்