மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி: ஆட்சியர் ஆய்வு

மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி: ஆட்சியர் ஆய்வு
X

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் - மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தலைமையில்அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.



மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்க ளின் முதல் நிலை சரிபார்ப்பு நிறைவு பெற்றதைய டுத்து மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது

மதுரை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2024-ல் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு நிறைவு பெற்றதையடுத்து, மாதிரி வாக்குப்பதிவு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் 2024-ல் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்த்தல் பணி 04.07.2023-அன்று தொடங்கி, மதுரையில் உள்ள டாக்டர் தங்கராஜ் சாலையில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் , பெங்களுரு பெல் நிறுவன பொறியாளர்கள் ஆகியோர்களால் மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் 7182 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3893 கட்டுப்பாட்டு கருவிகள், 4184 வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு 08.08.2023 அன்று மேற்படி பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து இன்றைய தினம் (09.08.2023) தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி மாதிரி வாக்குப்பதிவு நிகழ்வை மாவட்ட தேர்தல் அலுவலர்ஃ மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா , தலைமையில் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. இப்பணிகள் 10.08.2023-அன்று நிறைவு பெறவுள்ளன. மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் பயன்படுத்த இயலாத வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களுரு பெல் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மற்றும் தேர்தல் தனி வட்டாட்சியர் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!