பேரையூரில் சாலை வசதி கேட்டு 300 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல்

பேரையூரில் சாலை வசதி கேட்டு 300 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல்
X
Madurai News Tamil - கடந்த பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ல சாலையை சீரமைக்க வலியுறுத்தி பேரையூர் - டி. கல்லுப்பட்டி சாலையில் மறியல் நடந்தது

Madurai News Tamil - பேரையூரில் சாலை வசதி கேட்டு 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் :

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகாவில் உள்ள பி. ஆண்டிபட்டி கிராமத்தில் , கடந்த பல ஆண்டுகளாக சாலை படு மோசமாக குண்டும், குழியுமாகவும் , பள்ளி மாணவ , மாணவிகள் முதல் முதியோர்கள் வரை நடந்து செல்ல முடியாத அளவிலும், இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலையும் உள்ளது. பலமுறை வட்டாட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் , பேரையூர் - டி. கல்லுப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் 300-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .

இதில், ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் சாலையில் அமர்ந்து தங்களுக்கு சாலை வசதி செய்து தரக்கோரி கண்டன கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இம்மறியல், காரணமாக 30 நிமிடம் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . இதனை த்தொடர்ந்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போது சிறிது நேரம் வாக்குவாதத்துடன் போராட்டம் நிறைவு பெற்றது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story