சோழவந்தான் அருகே டிஎன்டி சான்றிதழ் வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம்

சோழவந்தான் அருகே டிஎன்டி சான்றிதழ் வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம்
X

மதுரை அருகே டிஎன்டி சான்றிதழ்  வழங்கக் கோரி கிராம மக்கள் நகல் எரிப்பு போராட்டம் நடத்தினார்கள்.

சோழவந்தான் அருகே டிஎன்டி சான்றிதழ் வழங்க கோரி கிராம மக்கள் நகல் எரிப்பு போராட்டம் நடத்தினார்கள்.

தமிழகத்தின் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சீர் மரபை சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்கள் கல்வி வேலை வாய்ப்புகளிலும் மிகவும் மின் தங்கிய நிலையில் இருப்பதால் மாநில அரசு தங்களுக்கு டிஎன்டி என்ற ஒற்றை சான்றிதழை வழங்க கோரி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களது கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட மேலக் கால் கிராமத்தில் சீர் மரபினர் நலச் சங்கத்தினர் டி.என்.டி. சான்றிதழ் வழங்க கோரி அரசாணை எண் 26ஐ எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், சீர்மரபினர்நலச் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து சீர் மரபினர் நல சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் தவமணி கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு டிஎன்டி எனும் ஒற்றை சாதி சான்றிதழ் வழங்க கோரி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். குறிப்பாக, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் எங்களுக்கு வழங்கப்பட்ட டிஎன்டி எனும் ஒற்றை சான்றிதழை மாநில அரசு வழங்காமல், காலம் தாழ்த்தி வருவது மிகவும் கண்டனத்திற்குரியது.

மேலும் ,எங்களுக்கு வழங்கியுள்ள சான்றிதழில் மத்திய அரசு நிறுவனங்களில் டிஎன்டி சான்றிதழும் மாநில அரசு நிறுவனங்களில் டிஎன்சி எனும் சான்றிதழும் வழங்கி குழப்பத்தை உண்டாக்கியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆகையால், எங்களுக்கு சீக்கிரம் டி.என்.டி. எனும் ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும் இல்லையென்றால், இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் பணிகளில் முழு வீச்சாக ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதில், சீர்மரபினர் நல சங்க மாநில தலைவர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story