அலங்காநல்லூரில் விடுதலை சிறுத்தை கட்சி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!

அலங்காநல்லூரில் விடுதலை சிறுத்தை கட்சி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!
X

விடுதலை சிறுத்தை கட்சிகள் ,பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றிதையடுத்து விசிகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி - விசிகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்:

அலங்காநல்லூர்:

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றதையடுத்து,மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கேட்டுக்கடையில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், கட்சியின் கொடியேற்றி கொண்டாடினர்.

இதற்கு, மாவட்டச் செயலாளர் சிந்தனை வளவன் தலைமை தாங்கினார். தொழிலாளர் விடுதலை முன்னணி அதிவீரபாண்டியன், மாநில துணைச் செயலாளர் அழகுமலை, ஆட்டோ சங்கத் தலைவர் திருமா வாசு, செயலாளர் பிரபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கப் பொருளாளர் பாண்டி, ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் கடல் கேசவன், நிர்வாகிகள் ராஜாராம், பரமசிவம், தமிழ்குமரன், மற்றும் ஆட்டோ சங்கஉறுப்பினர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர், ஏற்பாடுகளை, தொல்காப்பியர் ஆட்டோ நிலைய ஒருங்கிணைப்பு குழுவினர் செய்திருந்தனர்.

நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக, பாஜ கட்சிகள் எல்லா தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது.

Tags

Next Story
why is ai important to the future