/* */

மதுரை மாவட்டத்தில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்கள்: போலீஸார் விசாரணை

அண்ணா நகரில் ஹெல்மெட் அணியாமல் குடிபோதையில் அதி வேகமாக பைக் ஓட்டிச்சென்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

மதுரை மாவட்டத்தில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்கள்: போலீஸார் விசாரணை
X

பைல் படம்

குடிபோதையில் மொட்டை மாடியில் நடந்து சென்றவர் தவறி விழுந்து பலியானார்.

மதுரை , பொன்மேனி மெயின் ரோடு நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் துரைராஜ் மகன் அருண்ராஜ்(32.) இவர் குடிபோதையில் இருந்தார். வீட்டின் மொட்டை மாடியில் போதையில் நடந்து சென்ற போது தவறி கீழே விழுந்து விட்டார். இதில் பலமாக அடிபட்டு உயிருக்கு போராடிய அருண்ராஜை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .இந்த சம்பவம் குறித்து, அவரது மனைவி முத்துமாரி, எஸ். எஸ். காலனி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் ராஜின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உட்பட இரண்டு பேர் தூக்கு போட்டு தற்கொலை:

வண்டியூர் சௌராஷ்டிரபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பானுமதி 54. இவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது .சில நாட்களாக காய்ச்சல் தொடர்ந்ததால் மனம் உடைந்த பானுமதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகள் லட்சுமி பிரியா அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பானுமதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை ,ஆரப்பாளையம் கார்ப்பரேஷன் காலனியை சேர்ந்தவர் சௌந்தரராஜ் 40 .இவர் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து, கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சௌந்தரராஜனின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணா நகரில் ஹெல்மெட் அணியாமல் குடிபோதையில் அதி வேகமாக பைக் ஓட்டிய நான்கு பேர் கைது:

அண்ணா நகர் குருவிக்காரன் சாலையில் அதிக சத்தம் எழுப்பியும் ஹெல்மட் அணியாமலும் குடிபோதையில் நான்கு பேர் அதிவேகமாக பைக் ஓட்டிச் சென்றனர். இந்த சம்பவ குறித்து சாத்தமங்கலம் விஏஓ இருளாண்டி ,அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவுகளை செய்து சிசிடிவி கேமரா பதிவுகளைஆய்வு செய்தனர். பின்னர், அதிவேகமாக ஹெல்மெட் அணியாமல் போதையில் பைக் ஓட்டிய ஒத்தக்கடை மிராஸ் நகர் நான்காவது தெருவை சேர்ந்த சுலைமான் மகன் பாசில்( 20,), பாரதிபுரம் லியாகத்அலி மகன் வாஹித்கான்( 19,) கருப்பாயூரணி பாரதிபுரம் 16வது தெரு ரகுபதி மகன் பிரவீன்( 21,) கருப்பாயூரணி வடக்கு தெரு சந்திரன் மகன் யோகராம்( 22 )ஆகிய நான்கு பேரையும் அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.

தத்தனேரி சுடுகாட்டில் கஞ்சா விற்பனை வாலிபர் கைது:

மதுரை தத்தனேரி சுடுகாட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக செல்லூர் போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்தது .போலீசார் சுடுகாட்டு பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.சோதனையின் போது ,அங்கு கஞ்சா விற்பனை செய்த தத்தநேரி கணேசபுரம் கண்மாய்க்கரை பாண்டி மகன் சுபாஷ் என்ற படையப்பா( 24 )என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 9 Dec 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  10. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்