வண்டியூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
மதுரை வண்டியூர் பகுதியில் கட்டப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணியை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்
மதுரை மாநகராட்சி வண்டியூரில் புதிதாக கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகரிப்புநிலையத்தின் கட்டுமானபணிகளை ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சிசீர்மிகு நகரதிட்டத்தின் கீழ் வண்டியூரில், புதிதாககட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின்கட்டுமானபணிகளை,ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், நேரில் பார்வையிட்டுஆய்வுமேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி சீர்மிகுநகரதிட்டத்தின் கீழ், மதுரை மாட்டுத்தாவணியில், ஒருங்கிணைந்தமொத்த பழ அங்காடிமையம், பெரியார் பேருந்து நிலையம், சுற்றுலாதகவல் மையம்,குன்னத்தூர் சத்திரம், அருள்மிகுமீனாட்சிஅம்மன் திருக்கோவிலை சுற்றியுள்ள நான்கு மாசிவீதிகளில் ஸ்மார்ட் சாலைகள் மற்றும் நவீன குழல் விளக்குகள் பொருத்துதல், பல்லடுக்கு வாகனங்கள் நிறுத்துமிடம், தமுக்கம் மைதானத்தில் மதுரை மாநாட்டு மையம் , வைகைஆற்றில்இரு கரைகளில் மேம்பாட்டு பணிகள், திருமலை நாயக்கர் மகாலை சுற்றியுள்ள பகுதிகளில், பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்டபணிகள், மாநகராட்சிசார்பில், மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரபட்டுள்ளது.
மேலும், மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம்,குடிநீர்குழாய் அமைத்தல்,சாலைகள் அமைத்தல், போன்ற பணிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு நிதி பெறப்பட்டு பணிகள் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் படி, மண்டலம் 1 வண்டியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சேரும் கழிவுநீரைசுத்திகரிப்பு செய்வதற்கு வண்டியூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின், கட்டுமான பணிகளை,ஆணையாளர் பார்வையிட்டு நடைபெற்று வரும் பணிகளை விரைந்து மேற்கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, மாநகரபொறியாளர் அரசு,செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலெட்சுமி, உதவிஆணையாளர் காளிமுத்தன் உட்பட மாநகராட்சி அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu