திருமங்கலம் அருகே வேன் மரத்தில் மோதி விபத்து; கிளீனர் பலி, டிரைவர் படுகாயம்

திருமங்கலம் அருகே வேன் மரத்தில் மோதி விபத்து; கிளீனர் பலி, டிரைவர் படுகாயம்
X

திருமங்கலம் - ராஜபாளையம் மெயின் ரோட்டில் ஆலம்பட்டி அருகே விபத்துக்குள்ளான வேன்.

திருமங்கலம் அருகே வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கிளீனர் பலி, டிரைவர் பலத்த காயம்.

மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து - தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு காய்கறி ஏற்றி வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது திருமங்கலம் - ராஜபாளையம் மெயின் ரோட்டில் ஆலம்பட்டி அருகே அதிகாலையில் நிலை தடுமாறி வேன், மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், வேன் டிரைவர் காயமடைந்தார். மேலும், கிளீனர் முருகையா (60) சம்பவ இடத்தில் இறந்து விட்டார். இறந்தவரை, திருமங்கலம் தீயணைப்பு நிலைய பணியாளர் சேர்ந்து மீட்டு, ஹைவே பெட்ரோல் சார்பு ஆய்வாளர் அய்யணனிடம், நிலைய தீயணைப்பு அலுவலர் ஜெ ஜெயராணி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் ஓப்படைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story