சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் வடகாடு மஞ்சு விரட்டு போட்டி

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் வடகாடு மஞ்சு விரட்டு போட்டி
X

மஞ்சு விரட்டு போட்டியில் சீறிப்பாய தயாராக உள்ள காளை.

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பக்கம் உள்ள வடகாடு மஞ்சு விரட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.

விக்கிரமங்கலம் அருகே, கல்புளிசான்பட்டி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான் பட்டி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், மதுரை, ராமநாதபுரம் உள்பட தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரப்பட்டு போட்டிகள் நடந்தது. மஞ்சுவிரட்டு போட்டியில், முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கவிதாராஜா, விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கலியுகநாதன், சோழவந்தான் பேரூராட்சி எட்டாவது வார்டு கவுன்சிலர் டாக்டர் எம். மருது பாண்டியன், கல்புளிச்சாம் பட்டி பால்பாண்டி, செல்வகுமார், ரகு உள்பட கல்புளிச்சான்பட்டி, விக்கிரமங்கலம், கீழப்பட்டி, நடுவூர், கொடிக்குளம், கொசவபட்டி, முதலைக்குளம், எழுவம்பட்டி உள்பட தென் மாவட்ட பகுதியிலிருந்தது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பார்த்து ரசித்தனர். போட்டியில், வெற்றிபெற்ற காளைகளுக்கும்,காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் அண்டா,பானை, சைக்கிள் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. உசிலம்பட்டி டி.எஸ்.பி. செந்தில் குமார் தலைமையில் செக்கானூரணி இன்ஸ்பெக்டர் திலகரணி, விக்கிரமங்கலம் சப்-இன்ஸ் பெக்டர் அசோக்குமார் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விக்கிரமங்கலம்,செல்லம்பட்டி,செக்கானூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவ குழுவினர் மருத்துவ பணிகள் மேற்கொண்டனர்.

Tags

Next Story