சோழவந்தானில் மூடப்படாமல் உள்ள கால்வாய்: அச்சத்தில் பொதுமக்கள்

சோழவந்தானில் மூடப்படாமல் உள்ள கால்வாய்: அச்சத்தில் பொதுமக்கள்
X

சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சோழவந்தானில் இருந்து தேனூர் பாசன கால்வாய் மற்றும் கழிவுநீர் கால்வாய் செல்கிறது

சோழவந்தான், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். 15.24 சகிமீ பரப்பு கொண்ட சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளும், 23,872 மக்கள் தொகையும் கொண்டது.

சோழவந்தான் பேரூராட்சி, சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரில் புகழ்பெற்ற சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இது வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. வெற்றிலை, நெல், வாழை, தென்னை, கரும்பு முதலியன இங்கு பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன.

இந்த ஊர் இராமாயணத்தில் வரும் ஜனகர் மகளான ஜானகியை போற்றும் வகையில் ஜெனகபுரம் என்று முன்னர் அழைக்கப்பட்டது. மேலும் இங்குள்ள ஜெனகை மாரியம்மன் கோயில என்று அழைக்கப்படுகிறது. பாண்டிய நாட்டில் இருந்த இவ்வூரை சோழமன்னன் ஒருமுறை கண்டதாகவும் தனது ஆளுகைக்குட்பட்ட தஞ்சை நகர் போன்றே செழிப்பான வயல்வெளிகளுடன் திகழ்கிறது என வியந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சோழன் உவந்தான் என்று பெயர் பெற்று அது நாளடைவில் மருவி சோழவந்தான் என்று ஆயிற்று என்பர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி செல்லும் பொதுமக்கள் மற்றும் சோழவந்தானின் விரிவாக்கப் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த பகுதியில் தினந்தோறும் சுமார் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றனர்.

இதில், ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சோழவந்தானில் இருந்து தேனூர் பாசன கால்வாய் மற்றும் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் மேல்பகுதியில் கம்பிகள் மூடப்படாத நிலையில் இருப்பதால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இந்த பகுதியில் சென்று வருவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், ரயில்வே கேட் தினந்தோறும் சுமார் 50-க்கும் மேற்பட்ட முறை ரயில் சென்று வருவதற்காக மூடி திறக்கும் போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களிலும் நடந்தும் இந்த பகுதியை கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் இந்த மூடப்படாத கம்பிகளால் ஆபத்து ஏற்படும் சூழல் இருப்பதாக இந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும், தடுப்பு சுவர் இல்லாததால், இது எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் சூழல் இருப்பதாகவும் ஆகையால், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உடனடியாக இந்த கழிவுநீர் செல்லும் கால்வாயில் நீட்டி கொண்டிருக்கும் கம்பிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும், தம்பியின் மேல் பகுதியை மூடி தடுப்பு சுவர் அமைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் சோழவந்தானில் மூடப்படாத கழிவு நீர் கால்வாய் கம்பிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை போக்க வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story