/* */

ஐஎன்டிஐஏ கூட்டணிக்கு ஐக்கியகம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு: மாநில நிர்வாகி

நாட்டில் மீண்டும் ஜனநாயகம் தழைத்திட ஐஎன்டிஐஏ கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளதாக ஐக்கிய கம்யூனிஸ்ட்கட்சி தலைவர் பாஸ்கரன் கூறியுள்ளார்

HIGHLIGHTS

ஐஎன்டிஐஏ கூட்டணிக்கு ஐக்கியகம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு: மாநில நிர்வாகி
X

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகி பாஸ்கரன்.

மதவெறி பாசிச அரசியலை முறியடித்து, நமது நாட்டில் மீண்டும் ஜனநாயகம் தழைத்திட ஐஎன்டிஐஏ கூட்டணியை ஆதரிப்பது என்று இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட்கட்சி தலைவர் பாஸ்கரன் கூறியுள்ளார்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், தென் தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை விமான நிலையத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுடைய பெயரை சூட்டவேண்டுமென, மத்திய அரசாங்கத்தின் விமான போக்குவரத்து துறையை வலியுறுத்துகிறோம்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது, அப்பாவி மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூடு நடத்த காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது மட்டுமல்லாமல், அன்றைய ஆட்சியாளர்கள் மீதும் குறிப்பாக அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீதும் கொலை வழக்கு பதிந்து நீதியை நிலைநாட்ட வேண்டியது ஸ்டாலின், தலைமையிலான இன்றைய தமிழக அரசின் கடமை என வலியுறுத்துகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டில் முதல் இரண்டு இடம் பிடித்த வீரர்களுக்கு அரசு வேலை அளித்து, தமிழர்களின் விர மரபை காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, அவரை சனாதன மாமுனி போல் சித்தரிக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியின் அடாவடி செயலை எமது கட்சி கண்டிக்கிறது. இதன் மூலம் மதநல்லிணக்கம் பேணும் தமிழகத்தில் மதக் கலவரங்களை உருவாக்கி அமைதியை சீர்குலைக்கும் வேலையை ஆளுநரே செய்வது, தரங்கெட்ட கீழ்த்தரமான வெட்கக்கேடான செயலாகும். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அடியாளைப் போல் செயல்படும் ஆளுநரின் இத்தகு இழி செயல்களே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் பாஜக டெபாசிட் இழப்பதற்கு வழி வகுக்கும் எனவும் நம்புகிறோம்.

மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுவது தான் இந்தியாவின் இழந்த பெருமையை மீட்டு எடுக்கும் என, பொய்யுரைத்து, மக்களை மதி மயக்கி தவறாக வழி நடத்துகின்றது ஆர்.எஸ்.எஸ். மோடியின் பாஜக அரசு.

அதன் தொடர்ச்சியாக, கர்நாடக பாஜக எம்.பியான அனந்தகுமார் ஹெக்டே என்பவர் நம் நாடு முழுவதும் உள்ள மசூதிகளை இடித்துவிட்டு, அங்கு கோயில்களை கட்டுவோம் என, பிதற்றுவது அரசியல் சாசன நெறிமுறைகளுக்கு மாறானது. இத்தகு பேச்சுக்கள் இஸ்லாமியர்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் மட்டும் எதிரானது அல்ல பெரும்பான்மை இந்துக்களையும் அச்சுறுத்துவதாகும். மணிப்பூர் கலவரங்களைப் போல நாடு முழுவதும் கலவரங்களை உண்டு பண்ண முயலும் பாரதிய ஜனதா கட்சியினரின் இத்தகைய ஆபத்தான அரசியலில் இருந்து நாட்டைக் காக்க வேண்டும் எனில், ஐஎன்டிஐஏ கூட்டணியை ஆதரிக்க வேண்டியது மக்களின் கடமையாகும்.

அதற்கேற்ற வகையில், இடதுசாரி ஜனநாயக கட்சிகளின் ஒற்றுமையை பலப்படுத்தி நம் தேசம் காக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தார்.

Updated On: 23 Jan 2024 12:54 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கொடிக்கம்பம் அமைப்பதில் திமுக - பாமக மோதல்..!
  2. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே சாலையில் பட்டாசு வெடித்து 8 பேர் படுகாயம்..!
  3. தொழில்நுட்பம்
    பூமியின் எடை எவ்வளவு தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!
  4. போளூர்
    சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் மத்திய, மாநில அதிகாரிகள்...
  5. வணிகம்
    ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டத்தை மீண்டும் அதானி தட்டினார்..!
  6. காஞ்சிபுரம்
    சிறு கோயில்களையும் சிறப்பாக பராமரிக்க வேண்டும் - ஸ்ரீ விஜயேந்திரர்...
  7. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தீவிரம்
  9. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  10. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!