தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வேறுபாடு புரிந்தால் வாழ்க்கையே இன்பமாகும்

தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வேறுபாடு புரிந்தால் வாழ்க்கையே இன்பமாகும்
X

மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பதவி ஏற்பு விழாவில் தமிழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றார்.

தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வேறுபாடு புரிந்தால் வாழ்க்கையே இன்பமாகும் என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறினார்.

தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வேறுபாடு புரிந்தால் வாழ்க்கையில் எல்லாம் இன்பமே என்று மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பதவி ஏற்பு விழாவில், தமிழக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் பேசினார் .மதுரை மடீட்சியா அரங்கில் , மதுரை ஜல்லிக்கட்டு ரேட்டரி சங்க பதவி ஏற்பு விழா நடை பெற்றது.

மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க தலைவராக நெல்லை பாலு, செயலாளராக கதிரவன், பொருளாளராக சண்முகம் ஆகியோர் பதவி ஏற்றனர்.

விழாவில், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, நடிகர் வையாபுரி ‌மண்டல ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், உதவி கவர்னர் கண்ணன் ரோட்டரி சங்க ஆலோசகர் அழகப்பன் ஆகியோர் பேசினர்.

விழாவில் அமர் சேவா சங்கத் தலைவர் ஆய்குடி ராமகிருஷ்ணன் , செயலாளர் சங்கர் ராமன் மற்றும் மணிமேகலை பிரசுரம் மேனேஜிங் டைரக்டர் ரவி தமிழ்வாணன், கிங் மேக்கர் ஐஏஎஸ் அகாடமியின் மேனேஜிங் டைரக்டர் பூமிநாதன், திருச்சி தமிழிசை சங்க நிறுவனர் சீனிவாசன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், மதுரைகாந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், அரபிந்தோமீரா பள்ளியின் மேனேஜிங் டைரக்டர் அபிலாஷ், சத்தியம், குரூப் ஆப் கம்பெனி மேனேஜிங் டைரக்டர் செந்தில்குமார், திருச்சி டி.எஸ்.பி லில்லி கிரேஸ் ஆகியோருக்கு வொகேஷனல் எக்ஸ்லன்ஸ் அவார்டும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில், 2ஆயிரம் லிட்டருக்கு மேல் தாய்ப்பால் சேகரித்து அரசு மருத்துவ மனைக்கு வழங்கிய பெண்மணிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மேலும் , பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் கல்லூரி படிப்பு செலவு கட்ட முடியாமல் கஷ்டப்படுவதாக அறிவித்த உடனே ரூ.25ஆயிரம் ரோட்டரி உறுப்பினர்கள் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு கல்லூரி செலவை ரோட்டரி உறுப்பினர் எடுத்து கொள்வதாகவும் அறிவித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாது:-

இங்கு வாழ்நாள் சாதனையாளர் விருது இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டு இருக்கிறது. உண்மையிலே சேவைமனப் பான்மையை கொண்டிருக்கிற சேவைக்கு என தன்னை அர்ப்பணித்திருக்கிற இவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி இருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வாழ்நாள் சாதனையாளர்கள் விருது எப்படி வழங்கினார்கள் என்றால், தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசத்தை புரித்து கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் வழங்கியுள்ளார்கள். தேவை என்று கருதி ஆசையில் விழுந்து விடுவதால் துன்பம் கவ்வி கொண்டு விடுகிறது.

இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற அனைவரும் தேவை என்ன என்பதை முழுமையாக புரிந்து கொண்டு சேவை செய்கிறார்கள்.

தேவைக்கும் ஆசைக்கும் புரிதல் தேவை. சேவையில் கிடைக்கிற இன்பம் வேற எதிலும் கிடை கிடைப்பதில்லை. பிறருக்கு கொடுப்பதில் கிடைக்கும் இன்பம் வேறெதிலும் கிடைப்பதில்லை. சேவையை நோக்கமாக, கொள்கையாக, லட்சியமாக,அடித்தளமாக கொண்டால் வாழ்க்கை வலிமையாக இருக்கும். இதில் விட்டுக் கொடுக்கிற மனப்பான்மையும் சேவையாகதான் இருக்கிறது உறவுகளில் நட்புகளில் விட்டு கொடுக்க வேண்டும்.

எல்லாமே விதிபடி தான் அமைகிறது. விதி வலிமையானது என்ற அடிப்படையில் நாம் சேவை செய்து கொண்டிருக்கிற போது நாம் எளிமையாக கடந்து செல்லலாம். வலிமையான விதியை எளிமையாக கடந்து செல்ல சேவை என்னும் துடுப்பு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில், மதுரையில் பல்வேறு ரோட்டரி சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் நெல்லை பாலு செயலாளர், கதிரவன் பொருளாளர் சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது