வாகனத்தின் மீது மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் உயிரிழப்பு

வாகனத்தின் மீது மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற  இருவர் உயிரிழப்பு
X

பைல் படம்

பெருங்குடி மருதுபாண்டியர் சிலை அருகே எதிரே வந்த சரக்கு வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்

பைக்கில் சென்றவர் வாலிபர்கள் சரக்கு வாகனத்தில் மோதி உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா ,பெருங்குடி மருதுபாண்டியர் சிலை அருகே திண்டுக்கல் மாவட்டம், தேத்தம்பட்டியைச் சேர்ந்த முருக பாண்டியன் (46). என்பவர், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தார். அப்போது, மதுரை ஜெய்ஹிந்புரம் தேவர் நகரை சேர்ந்த சிக்கந்தர் பாட்ஷா மகன் அப்துல் கலாம் ( 20). மற்றும் அவரது நண்பர் ஜெய்ஹிந்புரம் பகுதியைச் சேர்ந்த ராஜா முகமது மகன் ரஹீம் ( 23). இருவரும், பைக்கில் பெருங்குடி நோக்கி சென்ற போது, மருதுபாண்டியர் சிலை அருகே எதிரே வந்த சரக்கு வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

இது குறித்து, அவனியாபுரம் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் சாலை விபத்தில் உயிரிழந்த அப்துல் கலாம், ரஹீம் இருவரது உடலையும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர். சாலை விபத்தில் இளைஞர்கள் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துயுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!