மோட்டார் சைக்கிளில் சென்றபோது கீழே விழுந்து இருவர் பலி

மோட்டார் சைக்கிளில்  சென்றபோது கீழே விழுந்து இருவர் பலி
X

பைல் படம்

டூவிலரில் சென்ற போது நிலை தடுமாறி விழுந்த கொத்தனார் மற்றும் கல்லூரி மாணவர் உயிரிழந்தனர்

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே சின்ன உடைப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் நிதிஷ்குமார்(18) . இவர் சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த பாண்டியின் மகன் தமிழரசன்(வயது 24). கொத்தனார் ஆக பணியாற்றி வருகிறார். தமிழரசனும் நிதிஷ்குமாரும் இன்று அதிகாலை டூவீலரில் சென்ற பொழுது சின்ன உடைப்பு கால்வாயில் நிலை தடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தனர்.

பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.மதுரை அரசு மருத்துவமனையில் தமிழரசன் நிதிஷ்குமார் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.இது குறித்து, பெருங்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story