அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி புகாரில் கணவன்-மனைவி கைது
அரசு வேலை வாங்கித்தருவதாக முக்கிய பிரமுகர்களின் பெயர்களை சொல்லி பல கோடி ரூபாய் மோசடி செய்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர்.
மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீ புகழ் இந்திரா-மனைவி பெயர் ரேணுகா. இவர், அதிமுக கட்சியில் இருந்த நிலையில், தற்போது அமைச்சர் முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்துள்ளார். பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, தேர்தல் பணியாற்றியது போல் புகைப்படம், தமிழக முதல்வர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு தனக்கு முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் பழக்கத்தில் உள்ளனர் என தெரிவித்து, மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பல நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக காவல்துறை ஆணையரிடம் கொடுத்த புகாரை அடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு இந்த மோசடி தம்பதியரை தேடி வந்த நிலையில் , இன்று அவர்கள் சிக்கினர்.மதுரை காவல்துறை ஆணையரின் தனிப்படையினர் இவர்களை கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu