மதுரையில் டைரி படத்தின் டிரெய்லர் அறிமுக விழா

மதுரையில்  டைரி படத்தின் டிரெய்லர் அறிமுக விழா
X

கதாநாயகன் அருள்நிதி படத்தின் கதாநாயகி, படத்தின் இயக்குனர்

திரைப்பட நடிகர் அருள்நிதி நடித்து வெளிவர உள்ள டைரி திரைப்படத்தின் புரோமோஷன் டிரெய்லர் அறிமுக விழா நடைபெற்றது

நடிகர் அருள்நிதி நடித்த டைரி படத்தின் படத்தின் புரோமோ (விளம்பரம்) விழா நடைபெற்றது

மதுரையில் திரைப்பட நடிகர் அருள்நிதி நடித்து வெளிவர உள்ள டைரி திரைப்படத்தின் புரோமோஷன் என்று சொல்லக்கூடிய விளம்பரப்படுத்தும் விழாவானது, மதுரையில் உள்ள வெற்றி சினிமாஸ் ,சினிப்பிரியா காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் நடைபெற்றது.

விழாவில், படத்தின் கதாநாயகன் அருள்நிதி படத்தின் கதாநாயகி, படத்தின் இயக்குனர் படத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் நடிகைகள், பாடலாசிரியர் ,பட விநியோகஸ்தர் குணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, தியேட்டரில் டைரி படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து, நடிகர் நடிகைகள் இயக்குனர் பாடலாசிரியர் உள்ளிட்டோர் ரசிகர்கள் மத்தியில் டைரி படத்தைப்பற்றி பேசினார்கள். இதில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து படக்குழுவினருடன் ரசிகர்களின் கலந்துரையாடலும் நடைபெற்றது.மேலும், ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர், நடிகைகள், டைரக்டர் உள்ளிட்டோர் பதில் கூறினர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!