சூரைக்காற்றுடன் கனமழை பாதுகாப்பு நடவடிக்கை: மின்வாரியம் அறிவிப்பு

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மூலமாக மஞ்சள் வண்ண எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது . பொதுமக்கள் நலன் கருதி மின்தடை மற்றும் மின்விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, 03.08. 2022 முதல் 05.08. 2022 வரை சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பொழிய வாய்ப்பு உள்ளதால் ,மின்தடை ஏற்பட்டாலோ, மரங்கள் மின்பாதைகளில் விழுந்து கிடந்தாலோ, மின்கம்பி அறுந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது போன்ற எதிர்பாராத இயற்கை இடர்பாடுகள் நிகழ்ந்தால் மின் நுகர்வோர்கள் உடனடியாக தொடர்பு கொண்டு சரி செய்வதற்காக கோட்ட அளவிலான குழு தலைவர்கள் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது
1. கிழக்கு கோட்டம்: 9445852848
பொறிஞர்.எம். ராஜா காந்தி செயற்பொறியாளர் / பகிர்மானம்
கிழக்கு மதுரை
2. சமயநல்லூர் கோட்டம்: 9445852900
பொறிஞர்.எஸ்.ஆறுமுகராஜ் செயற்பொறியாளர் / மின்னியல்
சமயநல்லூர்.
3. திருமங்கலம் கோட்டம்: 9445852828
பொறிஞர்.பி.
முத்தரசு
செயற்பொறியாளர் / பகிர்மானம்
திருமங்கலம்.
4. உசிலம்பட்டி கோட்டம் : 9445852888
பொறிஞர். எஸ். அழகு மணிமாறன்
செயற்பொறியாளர் / பகிர்மானம்
உசிலம்பட்டி.
பொறியாளர் எஸ்.மங்களநாதன்
மேற்பார்வை பொறியாளர் /மதுரை மின் பகிர்மான வட்டம் /மதுரை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu