திருமங்கலம் வேளாண் விற்பனைக் குழு இ-நாம் திட்டத்தில் இணைப்பு
பைல் படம்
மதுரை அருகே திருமங்கலம் விற்பனைக்கு குழு இ-நாமுடன் இணைக்கப்பட்டுள்ளதாக வேளாண் விற்பனை, வணிகத்துறை அறிவித்துள்ளது.
பல்வேறு கட்டங்களாக 22 மாநிலம் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் 1260 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை e-NAM திட்டத்தின் படி மின்னணு வர்த்தகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களை தேசிய அளவில் சந்தைப்படுத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவாயினைப் பெருக்கிடவும், நாடெங்கிலும் உள்ள வணிகர்கள் தங்களுக்கு கட்டுபடியாகக் கூடிய விலையில் தேவைப்படும் தரமான விளைபொருளை தேர்வு செய்து வாங்கும் வகையிலும் e-NAM என்னும் மின்னணு வர்த்தக பரிவர்த்தனை முறையினை இந்திய அரசு நிறுவியது.
இதில், தமிழ்நாட்டில் 157 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (பிப்10/) முதல் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் பகுதி விவசாயிகளின் விளை பொருட்களுக்கு போட்டி முறையில் அதிக விலை கிடைக்கும் வகையில் தற்போது காய்கறி மற்றும் பழங்கள் நீங்கலாக நெல், புளி, மல்லி, எள் திணை, கம்பு வரகு ,சாமை, கொள்ளு, துவரை, பருத்தி, சோளம், கேழ்வரகு, உளுந்து, பாசிப்பயறு, ஆமணக்கு, சூரியகாந்தி, தட்டை பயறு, குதிரைவாலி, மக்காச்சோளம், வேப்பங்கொட்டை ,மிளகாய் வற்றல், தேங்காய் , பருப்பு, நிலக்கடலை, பருப்பு ,மொச்சை, கொண்டைக்கடலை, அவுரி, நித்யகல்யாணி மற்றும் அனைத்து வேளாண் விளை பொருள்களையும் e-NAM திட்டம் மூலம் சரியான எடையில் திருமங்கலம் இநாம் சந்தையில் விற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் படி திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இ-நாம் எனும் மின்னணு வர்த்தகத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளதால், மாநில மற்றும் தேசிய அளவில் அதிக எண்ணிக்கையிலான வணிகர்கள் ஏலத்தில் பங்கு பெற வாய்ப்பாக அமைந்துள்ளது.e-NAM திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள்:- இந்தியா முழுவதும் உள்ள வேளாண் விளைப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் சேவை அனைத்தையும் தேசிய வேளாண் சந்தை செயலில்(Apps) தெரிந்து கொள்ள முடியும்.
விவசாயிகளின் விளை பொருட்களை ஆய்வகங்கள் மூலம் தரம் பிரித்து நல்ல விலை கிடைக்க வழி செய்து கொள்ள முடியும்.பரிவர்த்தனை முடிந்தவுடன் தங்களது விளை பொருட்களுக்கான எடை மற்றும் விலையினை தெரிந்து கொள்ளலாம்.நாள் முழுவதும் காத்திருக்க தேவையில்லை மற்ற பணிகளையும் கவனிக்கலாம்.
எவ்வித பிடித்தமும் இன்றி கிரையத்தொகை முழுவதும் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும், பணத்திற்கு முழு பாதுகாப்பு.ஒழுங்குபடுத்த சந்தை அமைப்பு மற்றும் வெளிப்படையான பரிவர்த்தனைகள்.அதிக எண்ணிக்கையிலான வணிகர்கள் கலந்து கொள்வதால் போட்டி விலை மூலம் உயர்ந்த பட்ச விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
48 மணி நேரத்தில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உட் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது.உலர்கள வசதி, கிட்டங்கி வசதி, குளிர்பதன கிட்டங்கியில் குறைந்த வாடகைக்கு சேமிக்கும் வசதி கிடைக்கும்.வாடகைகக்கு வேளாண் இயந்திரங்கள் போன்ற அனைத்து வசதிகளையும் விவசாயிகள் பெற்று பயன் பெறலாம்.
வியாபாரிகளுக்கு ஏற்படும் நன்மைகள்:
1.வெளியூர் வியாபாரிகள் e-NAM திட்டத்தின் தாங்கள் வாங்கிய விளைபொருட்களை அவர்களது இருப்பிடத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கு வாகன வசதி ஏற்படுத்தி தரப்படும்.2.மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை வசதி உள்ளதால் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது.3.இத்திட்டத்தின் மூலம் ரூபாய்1கோடி மதிப்பிற்கு பரிவர்த்தனை செய்யும் வர்த்தகர்களுக்கு TDS விலக்கு பெறும் வசதி.4.உட்கட்டமைப்பு வசதிகள்.எடை மேடை,
உலர்களம், வேளாண் விளை பொருட்களை சுத்தப்படுத்தும் இயந்திரம் மூலம் விளைப் பொருட்களின் மதிப்பு கூட்டல், கிட்டங்கி வசதி, குளிர்பதன கிட்டங்கி வசதி, வாடகைக்கு சேமிக்கும் வசதி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5.தரப்பரிசோதனை செய்யப்பட்ட தரமான விளைபொருட்களை கொள்முதல் செய்யும் வசதி.6.பரிவர்த்தனை முடிவுகளை இணையம் மூலம் கைப்பபேசி வாயிலாக அறிந்து கொள்ளும் வசதி கிடைக்கிறது.
எனவே, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்து e-NAM திட்டத்தின் மூலம் பயன் பெறுமாறு மதுரை விற்பனை குழு செயலாளர் மெர்சி ஜெயராணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, திருமங்கலம் பகுதி விவசாயிகள் 9952355375 லும், கள்ளிக்குடி பகுதி விவசாயிகள் 9150725907 லும், டி. கல்லுப்பட்டி பகுதி விவசாயிகள் 8667255045 லும் உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.தினசரி சந்தை நிலவரங்களை அறிந்திட திருமங்கலம் வேளாண் சந்தை வாட்ஸ் அப் குழுவில் இணைந்திடுவீர்.மேலும் விரிவான விவரங்களை பெற, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வெங்கடேஷ், 90252152075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu