மதுரையில் கையில் வாளுடன் பொதுமக்களுக்கு மிரட்டல்: இளைஞர் கைது
Salem Rowdy
மதுரை ஜன 14 தெற்கு வாசல் பகுதியில் கையில் வாளுடன் பொதுமக்களை மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை தெற்கு வாசல் எஃப் எஃப் ரோடைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் விக்னேஷ் என்ற அப்பளவிக்கி 29. இவர் தெற்கு மாசி வீதி சப்பானி கோவில் தெரு பூ மாரியம்மன் கோவில் தெரு சந்திப்பில் கையில் வாள் ஒன்றுடன் அந்த வழியாகச் சென்ற பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தார்.
இந்த தகவல் தெற்கு வாசல் போலீசாருக்கு தெரிய வந்தது. சப்இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஷை சுற்றி வளைத்து பிடித்தனர் .அவரிடம் இருந்த வாளையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
பைக் ரேஸ் ஓட்டிய பத்து இளைஞர்கள் கைது:
மதுரை ஜன 16தல்லாகுளம் சொக்கிகுளம் வள்ளபாய் மெயின்ரோட்டில் அதிக சத்தத்துடன் பைக் ரேஸ் ஒட்டிய 10 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த பைக்குகளையும் பறிமுதல் செய்தனர் .
தல்லாகுளம் வள்ளபாய் மெயின் ரோடு சந்திப்பில் வாலிபர்கள் அதிக சத்தத்துடன் பைக் ரேஸ் ஓட்டிக்கொண்டிருந்தனர் .இந்த தகவல் தல்லாகுளம் போலீசாருக்கு தெரிய வந்தது .தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிக சத்தத்துடன் ஆபத்தை விளைவிக்கும் விதமாக பைக் ரேஸ் ஓட்டிய ஆழ்வார்புரம் வைகை வடகரை சாகுல் அமீது மகன் முஹம்மது இம்ரான் 19, அதே பகுதியைச் சேர்ந்த நாகூர்கனி மகன் முகமது ஆசிக் 19 ,மகாத்மா காந்தி நகர் கண்ணன் மகன் லோகேஸ்வரன் 19 கிருஷ்ணாபுரம் காலனி நயினார்ராஜ்மகன் ரமணன் 19 உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர்கள் ஓட்டிச் சென்ற ஐந்து பைக்குகளையும் கேமரா ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
லாரி மோதி பைக்கில் அமர்ந்து சென்ற சிறுவன் பலி
மதுரை ஜனா 16 கோச்சடை மெயின் ரோடு முடக்கு சாலையில் லாரி மோதியவிபத்தில் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற சிறுவன் பலியானான்.
பி.பி.சாவடிசந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி மகன் மணிகண்டன் 17. இவர் கோச்சடை மெயின் ரோட்டில் தந்தை ஓட்டிச்சென்ற பைக்கின் பின்புறமாக அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற நெடுங்குளம் வடக்கு தெரு சின்னபாண்டி மகன் முத்து முருகன் 25 என்பவர் ஓட்டிச் சென்ற லாரி மோதி விபத்தானது.
இந்த விபத்தில் சிறுவன் மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானான்.இது குறித்து தந்தை பார்த்தசாரதி கொடுத்த புகாரில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்ற ஒருவர்கைது
பொங்கல் திருநாள் திருவள்ளுவர் பிறந்த நாளை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கூடல் நகர் பஸ் ஸ்டாப் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.எஸ்.ஐ பாலு தலைமையில் போலீசார் சம்பவ இடத்தை கண்காணித்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வாடிப்பட்டி தாலுகா ஏ .கோவில் பட்டியை சேர்ந்த கனகராஜ் 46 என்பவர் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து அவரிடமிருந்து 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu