திருமங்கலம் எம்எல்ஏ ஆர். பி .உதயகுமார் நகராட்சியில் வாக்கு சேகரிப்பு

திருமங்கலம்  எம்எல்ஏ  ஆர். பி .உதயகுமார் நகராட்சியில்  வாக்கு சேகரிப்பு
X

திருமங்கலம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

திருமங்கலம் நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம். மேற்கொண்டார்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி நகர் மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான திரு ஆர். பி. உதயகுமார் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருமங்கலம் நகராட்சி நகர் மன்ற 4வது வார்டு கலைச்செல்வி, ஆதரித்து குதிரை சாரிகுளம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து 3-வது வார்டு தங்கபாண்டியன், 7வது வார்டு பிஸ். முருகன், 8வது வார்டு தங்கம், 12வது வார்டு சித்ரா, 17 வது வார்டு திருமதி உமாவிஜயன், 1வது வார்டு வேட்பாளர் ஜெ.டி .விஜயன், 2வது வார்டு ஜி .பாண்டியன், 9வது வார்டு போது ராஜன், 11வது வார்டு உஷா சுரேஷ் 10-ஆவது வார்டு கவிதா, இவர்களை ஆதரித்து ஆர் .பி .உதயகுமார் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்பொழுது கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நமது திருமங்கலம் நகராட்சி நகர் மன்ற தலைவர் திருமதி உமா விஜயன் அவர்கள் பதவி வகித்தபோது திருமங்கலம் நகர் முழுவதும் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி, குப்பை அகற்றம் பராமரிப்பு, மருத்துவ உதவி, ஊரடங்கு காலங்களில் கொரோனா நலத்திட்ட உதவி, என பல்வேறு அத்தியாவசிய உதவிகளை செய்து அதிமுக ஆட்சி கலங்கம் இல்லாமல் ஆட்சி செய்தது. அதனை போலவே நமது நகர் மன்ற உறுப்பினர்களும் நகர் மன்ற தலைவரும் பல்வேறு சாதனைகளை மக்களுக்காக தன் வாழ்வை அற்பணித்து உதவிகளை செய்து நற்பெயரை பெற்றார்கள்.

ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதி எங்கே? செய்த சாதனை என்ன? என மக்களே கேள்வி எழுப்பும் நிலைக்கு திமுக ஆட்சி தள்ளப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் மக்களின் நலன் கருத்தில் கொண்டு பொங்கல்பரிசு 2000, கரும்பு பொங்கல் செய்யும் அரிசி, சர்க்கரை, பல்வேறு உதவித் திட்டங்களை செய்தும் ஊரடங்கு களங்களிலும் உதவித்தொகையும் செய்து சாதனை படைத்தது . மேலும் எண்ணற்ற சாதனைகளை அதிமுக ஆட்சியில் செய்துள்ளது. சொல்ல அளவில்லாமல் உள்ளது.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாம் செய்வோம், எதையும் செய்வோம், என்று சொன்னது செய்ததை எங்கே?என்று கேள்வி எழுப்புகிறேன்? பொங்கல் பரிசு கொடுக்கிறோம் என்ற பெயரில் கமிஷனை பெற்றுக்கொண்டு கரைந்து போன மண்ட வெல்லத்தை கொடுத்து மக்களை ஏமாற்றினார்கள்.மண்டவெல்லத்தை காணோம் என்று மக்கள் பொங்கல் பரிசு பெற்று சென்ற பின்பு பதற்றப்பட்டனர்.பொதுமக்கள் என்ன செய்ய முடியும்?திமுக அரசு கொடுத்த மண்ட வெல்லத்தை காணோம் என்று போலீசில் புகாரா செய்ய முடியும் .? அதை தவிர வேற வழியில்லை? .

நேற்று காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது மக்களிடம் எதை பொய் சொல்வது! எப்படி பொய் சொல்வது என்று யோசித்து வாக்கு சேகரிக்க தெரியாமல்! எங்கள் கட்சி தலைவர்களையும் எங்களையும் குறை கூறி மட்டுமே வாக்கு சேகரித்தார்.மக்களுக்கு நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன், என்று சொல்ல வார்த்தையும் இல்லை ?வழியும் இல்லை? கேள்விக்குறியான ஒரு பிரசாரத்தை மேற்கொண்டது மக்களுக்கு தெரியும். புரியும் .திமுகவினர் இடையே தோல்வி பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சாதனை ஆட்சி, சரித்திர ஆட்சி, அதிமுகவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உங்களுக்காக உழைக்க ஓடோடி வரக்கூடிய சித்ரா, தங்கம் பாண்டி, முருகன், ஜெ.டி.விஜயன், கவிதா ,போதுராஜன்,ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். என்றார் ஆர்.பி. உதயகுமார்.



Tags

Next Story