மதுரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் தங்க நகை கொள்ளை
கொள்ளை நடந்த வீடு.
Madurai News Today -மதுரை வசந்த நகர் பகுதியை சேர்ந்த சீனிவாச சங்கர நாராயணன் (வயது 55). என்பவர் கேட்டரிங் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த ஜூலை 2-ம் தேதி உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் திருச்சி சென்றார். அதன் பின்னர் அவர் நேற்றிரவு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் ,வீட்டின் உள்ள இருந்த லாக்கர் திறக்கப்பட்டு சுமார் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20 லட்சம் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதனைதொடர்ந்து, சம்பவம் குறித்து மதுரை சுப்பிரமணியபுரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடப்பதற்கு முன் திருடர்கள் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை கவிழ்ந்து இருப்பதை கவனித்து அந்த சி.சி.டி.வி. வைத்துள்ள வீட்டின் உரிமையாளர் நேற்று காலை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சுப்பிரமணியபுரம் காவல் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் ஏதேனும் திருட்டு சம்பவம் ஏதும் நடந்துள்ளதா என, விசாரித்துள்ளார்கள். திருட்டு நடந்த வீட்டில் ஆள் இல்லாததால் யாரிடம் சொல்லாத காரணத்தினாலும், அங்கு நடந்தது தெரியவில்லை எனினும், மதியம் மாலை வேலைகளில் தொடர்ந்து ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வந்திருந்தனர். சங்கரநாராயணன் நேற்று இரவு ஒன்பது மணி அளவில் திருச்சியில் இருந்து மதுரை வந்துள்ளார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டு கதவு உடைக்கப்பட்டு பீரோக்களில் உள்ள பணம் அனைத்தும் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காவல்துறை தரப்பில் தெரிவிப்பது என்னவென்றால், வெளியூர் செல்லும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் நிலையத்தில் நடவடிக்கையாக தகவல் தெரிவித்து செல்ல வேண்டும் என்பதும், மேலும் அதிக அளவு பணம் மற்றும் நகைகளை வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu