மதுரை அருகே பெண் காவலர் வீட்டில் கொள்ளை முயற்சி

மதுரை அருகே பெண் காவலர் வீட்டில் கொள்ளை முயற்சி
X
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பெண் காவலர் வீட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

திருமங்கலத்தில் உள்ள பி.சி.எம் நகரில் ஆதிலட்சுமி என்பவர் தனது கணவர் ராஜகோபாலுடன் வசித்து வருகிறார். ஆதிலட்சுமி திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலையத்தில் காவலராக, பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ராஜகோபால் தனியார் நிறுவனத்தில், டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து கொள்ளையடிக்க முயன்று உள்ளனர்.

பூட்டை உடைத்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஆதிலட்சுமி வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். பொதுமக்கள் கூடியதால், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். வீட்டில் பணம் நகை எதுவும் இல்லாததால், கொள்ளையர்கள் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

திருமங்கலம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபடுவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காவல்துறையினர் இதுகுறித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!