விவசாய நிலத்தில் தொழில் தொடங்கவுள்ளதைக் கண்டித்து ஊராட்சி அலுவலகம் முற்றுகை
வாடிப்பட்டி அருகே செம்மினிப் பட்டியில், விவசாய நிலத்தில் தொழில் நிறுவனம் தொடங்குவதை எதிர்த்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை, வாடிப்பட்டி ஒன்றியம், செம்மினிப் பட்டி கிராமத்தில், விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் தொழில் தொடங்க இருப்பதாக கூறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். இது குறித்து, முறையாக ஆர்.டி.ஓ., வட்டாட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி மன்றத்திற்கு எதிராகவும், மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இனிமேலும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ,அருகில் உள்ள மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு விவசாய நிலங்களை ஒதுக்க வேண்டாம் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.புதிதாக தொழில் தொடங்க, எதற்கும் பயன்படாத தரிசு நிலங்களை ஒதுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
தில்லியில் அண்மையில் நடந்த மாநில தொழில்துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாட்டில் பங்கேற்ற தொழில் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, தொழில்மயத்தை ஊக்குவிப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறினார். தொழில் மயமாக்கப்படுவதில் விவசாயிகளும் பங்கேற்க வேண்டுமே தவிர, அவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அத்தகைய சூழ்நிலை உருவாக அனுமதிக்கக் கூடாது.
இதைத் தவிர்க்க வேண்டுமெனில் ஒவ்வொரு மாநிலமும், தங்கள் பகுதியில் உள்ள தரிசு நிலங்களைப் பற்றிய தகவல் தொகுப்பை வைத்திருக்க வேண்டும். இத்தகைய தரிசு நிலங்களில் பயிரிடுவது சாத்தியம் எனில் அதை மேற்கொள்ளலாம். அல்லது அப்பகுதியில் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதிக்கலாம். தொழில்மயமாக்குவது என்ற சிந்தனை கடைசி முயற்சியாகத்தான் இருக்க வேண்டும் என்றும் சர்மா கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu