வெளிநாடு செல்லும் மாநகராட்சி பள்ளி மாணவரை பாராட்டிய மேயர்

வெளிநாடு செல்லும் மாநகராட்சி பள்ளி மாணவரை பாராட்டிய மேயர்
X

அரசின் சார்பில் தென்கொரியா நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லும் பள்ளி மாணவருக்கு  சால்வை அணிவித்து பாராட்டிய மேயர் இந்திராணிபொன்வசந்த்.

அரசின் சார்பில் தென்கொரியா வுக்கு கல்வி சுற்றுலா செல்லும் பள்ளி மாணவரை மேயர் இந்திராணிபொன்வசந்த் வாழ்த்தினார்

தமிழக அரசின் சார்பில், கல்வி சுற்றுலாவாக தென்கொரியா நாட்டிற்கு செல்லும் மாநகராட்சி பள்ளி மாணவருக்கு மேயர் இந்திராணிபொன்வசந்த் பாராட்டு தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், மாநில அளவில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவனை, மேயர் இந்திராணி பொன்வசந்த் (01.11.2023) பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், தமிழக அரசின் சார்பில் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வருகிறார்கள்.

மதுரை மாநகராட்சி சுந்தரராஜபுரம் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் எம்.சரவணபாண்டியன் 2022-2023 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளதற்கும் மற்றும் தமிழக அரசின் சார்பில் எதிர்வரும் 06.11.2023 முதல் 11.11.2023 வரை தென் கொரியா நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்ல இருக்கும் அம்மாணவனை, மேயர் இந்திராணி பொன்வசந்த் நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்துத்தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, கல்விக் குழுத் தலைவர் ரவிச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story