மதுரையில் கல்லூரியில் சேர மாணவிக்கு உதவிய ஆட்சியர்
சாமநத்தம் ஊராட்சி சேர்ந்தவர் வேல்முருகன்- பிரேமா தம்பதியின் இரண்டு மகள்கள் நந்தினி மற்றும் ஸ்வேதா
கிராமத்து மாணவிக்கு கல்லூரியில் இடம் கிடைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் உதவிய சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, சாமநத்தம் ஊராட்சி சேர்ந்தவர் வேல்முருகன்- இவரது மனைவி பிரேமா இவர்களுக்கு நந்தினி மற்றும் ஸ்வேதா என இரண்டு மகள்கள் உள்ளனர். நந்தினி, நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் டூ தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 546 மதிப்பெண் பெற்று உள்ளார். தேர்வு முடிவுகள் வெளியான சமயத்தில் நந்தினிக்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு, வீட்டில் இருந்ததால் ஆன்லைன் விண்ணப்பங்கள் சரிவர பூர்த்தி செய்யவில்லை என கூறப்படுகிறது..
மதுரை மீனாட்சி கல்லூரியில் விண்ணப்பம் செய்திருந்தும், அது குறைபாடாக இருந்துள்ளது. கவுன்சிலிங் தேதியான கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்று பார்த்த போது மாணவி நந்தினியின் மதிப்பெண் விவரம் கல்லூரியில் பதிவு பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து மாணவி நந்தினி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் அதனைத் தொடர்ந்து,மதுரை மாவட்ட ஆட்சியர் நந்தினிக்கு மதுரை மீனாட்சி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இடம் ஒதுக்கி கல்லூரியில் சேர வாய்ப்பு அளித்தார் .
இதனை தொடர்ந்து, நந்தினி மாணவி கூறும் போது அம்மை நோயால் பாதிக்கப்பட்ட தனக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மீனாட்சி கல்லூரியில் பட்டப் படிப்பிற்கு இடம் கொடுத்து உதவியதற்கு மதுரை எம் பி சு வெங்கடேசன் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் முதல்வர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
மாணவி நந்தினிக்கு, மதுரை மீனாட்சி கல்லூரியில் இடம் கிடைக்க மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் முயற்சி செய்துள்ளனர். மற்றும் முதல்வருக்கும் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாணவி நந்தினிக்கு கல்லூரியில் இடம் கிடைக்க உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu