சோழவந்தான் அருகே தென்கரை சித்தர் குருபூஜை விழா

சோழவந்தான் அருகே தென்கரை சித்தர்    குருபூஜை விழா
X

சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் நடைபெற்ற குருபூஜை விழா.

சோழவந்தான் அருகே தென்கரையில் சித்தர் காளங்கிநாதரின் சீடன் குருராமச்சந்திரன் குருபூஜை விழா நடைபெற்றது

சோழவந்தான் அருகே தென்கரையில் சித்தர் காளங்கிநாதரின் சீடன் குருராமச்சந்திரன் குருபூஜை விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் , சோழவந்தான் அருகே தென்கரையில் சித்தர் காளங்கிநாதரின் சீடன் ஐ.குருராமச்சந்திரன் என்ற ஐ.ஆர் குருபூஜை நடைபெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நடைபெறும் குரு பூஜையினை யொட்டி யாகசாலை விநாயகர் திருக்கோவில் பிரம்மஸ்ரீ பாலமுருகன் சர்மா, ரிஷிகேசன் சிவம் யாகசாலை பூஜை நிகழ்ச்சியினை நடத்தினர். தொடர்ந்து பஜனை பாடல்கள் பாடி தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அறுசுவை அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை கோகுலபாபா, சாய் முருகன், மகேஸ்வரி, அம்பிகைஅபிராமி, கலைவாணிமற்றும் தென்கரை கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர். காளங்கிநாதர் சீடன் குருராமச்சந்திரன் சித்தர் பீடத்தில் மாதந்தோறும் அம்மாவாசை பௌர்ணமி தினங்களில் சிறப்பு பூஜையும் அமாவாசை தோறும் அன்ன தான நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இங்கு ஆண்டு தோறும் குரு பூஜையானது, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!