மதுரை கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை

மதுரை கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை
X

மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், காலபைரவருக்கு நடைபெற்ற பூஜை:

காலபைரவருக்கு பக்தர்களால் வடைமாலை அணிவிக்கப்பட்டு தயிர்சாதம் படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கோயில்களில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

மதுரை நகரில் பல கோயில்களில், தேய்பிறை அஷ்டமியையொட்டி, கால பைரவருக்கு பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர். மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயம், அண்ணாநகர் சர்வேஸ்வரன் ஆலயம், வரசித்தி விநாயகர், சித்தி விநாயகர் ஆலயம், மதுரை கோமதிபுரம் ஞானசித்தி விநாயகர், செல்வ விநாயகர் ஆலயம், மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்யா விநாயகர் ஆலயங்களில், தேய்பிறை அஷ்டமியையொட்டி, கால பைரவருக்கு மஞ்சள்பொடி, பால், தயிர், இளநீர் போன்ற பொருட்களால், அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையடுத்து, காலபைரவருக்கு பக்தர்களால் வடைமாலை அணிவிக்கப்பட்டு, தயிர்சாதம் படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் முகக் கவசம் அணிந்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story