மதுரை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர் தினவிழா: ஆணையாளர்
மதுரை மாநகராட்சி பள்ளிகளில், ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 பொன்முடியார் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் தினவிழாவில் மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், கலந்து கொண்டு ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் கொண்டாடினார். தொடர்ந்து, பள்ளி மாணவிகளுக்கு ஆணையாளர் பாடம் எடுத்து கலந்துரையாடினார்.
ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி டாக்டர் இராதாகிருஷ்ணன், பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சிபகுதியில் உள்ள 24 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் போல் பேன்ட், சர்ட் உடையிலும், மாணவிகள் சேலைகள் அணிந்து சக மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தியும் கொண்டாடினர். இதைப் போல பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் கேக் வெட்டி ஆசிரியர் தினத்தை கொண்டாடினார்கள். பொன்முடியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தினவிழாவின மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் பஙகேற்றார்.
மாதா, பிதா வரிசையில் மூன்றாவது இடம் பெற்றுள்ளவர் தான் குரு. நமக்கு இந்த உலகை கற்பிக்கும் ஆசானாக ஆரசிரியர்கள் விளங்குகின்றனர். குருகுலக் கல்வி முறையில் இருந்து வகுப்பறை கல்விக் கூடங்கள் என மாற்றம் ஏற்பட்ட போதிலும், மாற்றம் காணாதவை ஆசிரியர்கள் மட்டுமே. ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களை நமக்கு கற்பித்து தனது, உண்மையான வழிகாட்டியாக ஆசிரியர்கள் தான் திகழ்கின்றனர்.இந்நிலையில் அப்படிப்பட்டவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu