மதுரையில் ஸ்டார்ட் அப் திருவிழா தொடக்கம்..!
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா.
மதுரை.
மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) சார்பாக 'தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா-2024' தொடக்க விழா நடைபெற்றது.
புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், புத்தொழில் செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும் இத்திருவிழா 2 நாட்கள் நடத்தப்படுகிறது.
தொடக்க விழா நிகழ்வில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்.
இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மூலமாக தமிழ்நாடு அரசு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக செயல்படுத்தும் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு திட்ட ஆணைகளை வழங்க உள்ளார்கள்.
தொடக்க விழா நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ் குமார், புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் தலைமை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன், CII தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம், நபார்டு முதன்மை பொது மேலாளர் ஆர். ஆனந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால், உட்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu