பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சென்னை சென்ற தமிழக ஆளுநர்!

பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சென்னை சென்ற தமிழக ஆளுநர்!
X

மதுரை விமான நிலையத்தில், தமிழக ஆளுநருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு.

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக ஆளுநர்; முன்பை விட பாதுகாப்பை பலப்படுத்திய காவல்துறையினர்

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக ஆளுநர்; முன்பை விட பாதுகாப்பை பலப்படுத்திய காவல்துறையினர்:

மதுரை:

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்து பின்னர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு, மற்றும் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து, இன்று மதியம் சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். ஏர் இந்தியா விமானம் மூலம், மதுரையிலிருந்து சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

இந்த நிலையில் ஆளுநருக்கு வழக்கத்தைக்காட்டிலும் இந்த முறை கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், மதுரை விமான நிலையத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!