தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகை ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்: அதிமுக கோரிக்கை

தமிழக அரசு  பொங்கல் பரிசுத்தொகை ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்:  அதிமுக கோரிக்கை
X

வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய  முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்

பொங்கலுக்கு ரூபாய் 5000 வழங்க வேண்டும் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு கட்சியினருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பூத் கமிட்டியில் தகுந்த நபர்களை நியமிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து பேசினார். நம்மை விட்டு பிரிந்தவர்கள் நம்மை விமர்சனம் செய்வதையே வேலையாக வைத்துள்ளார்கள். திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது மிகப்பெரிய அதிருப்தி மக்களுக்கு உள்ளது.

தமிழர் என்று சொல்லி பொங்கலுக்கு கரும்புதர மறுக்கிறார்கள். கரும்பு விவசாயிகள் வேதனையோடு உள்ளனர். பொங்கலுக்கு ரூபாய் ஐயாயிரம் தர வேண்டும். சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு. குறித்து அதிமுக பேரூர் வரை போராட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில், அதிமுக பொன் விழா மாநாடு நடைபெற உள்ளது. இந்த அரசுக்கு செங்கரும்பு கொடுக்க மனமில்லை. கரும்பில்லாத பொங்கல் திருநாள் இதுவே ஆகும். இந்த அரசுக்கு மக்களுக்கான அக்கறை இல்லை. மக்கள் என் அடையாள அட்டை வழங்கும் திட்டமானது முன்னாள் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த திட்டமாகும்.

எங்கள் ஆட்சியில், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்திய போது ஆம்னி பேருந்துமுதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டண நிர்ணயம் செய்தோம். ஆனால், திமுக அரசு தற்போது பேருந்து கட்டணம் உயர்ந்த போது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது வேதனை தருகிறது. இந்த அரசு செங்கரும்பும்பு கொள்முதல் செய்யவில்லை விவசாயிகளிடமிருந்து மண்டை வெல்லமும் கொள்முதல் செய்யவில்லை என்றார்.

பாஜக கூட்டணி குறித்து கேள்விக்கு பதில் அளிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவு செய்வார் என்றும், கடந்த காலங்களில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, பொங்களுக்கு ரூபாய் 5000 வழங்க வேண்டும் என்று கூறியதை மறந்து தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூபாய் 1000 வழங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கு வரும் தேர்தலில், மக்கள் பதில் சொல்வார்கள் என்றார் ஆர்.பி. உதயகுமார்..

இதில், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு . காளிதாஸ், இளைஞர் இளம் பெண் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மணிமாறன், நிர்வாகிகள் கோட்டைமேடு பாலா, தென்கரை நாகமணிஜெயராமன், மலைச்சாமி, செந்தாமரை கண்ணன், சிவசுப்பிரமணி, பிச்சை, சசி, விஎஸ்பாண்டி, பிரசன்னா ராஜா, ரவி, ஜெயக்குமார் ,பெரிய கருப்பன், ராமநாதன் பாண்டி அழகர் தேவன் வெள்ளி பாலன் பாண்டி முத்துச்சாமி கிருஷ்ணசாமி மணிகண்டன் கார்த்திக் மாணிக்கம் முருகன் மற்றும் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers