முல்லை பெரியாறு பிரச்னையில் தமிழக முதல்வர் வாய் திறக்கவில்லை: முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
மதுரை தேனி திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரம் முல்லைப்பெரியார் ஆகும். ஏறத்தாழ 2 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமும், ஒரு கோடி விவசாய மக்களின் வாழ்வாதாரமாக 5 லட்சம் ஏக்கர் நஞ்சை ,புஞ்சை நிலங்கள் மூலம் சிறுதானியங்கள் ,காய்கறிகள், பழங்கள் நெல் ,வாழை உள்ளிட்ட பல வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன இப்படி பன்முகத்தன்மை கொண்ட நமது பாசன உரிமையை தட்டி பறிக்கும் வண்ணம் வணிக ரீதியில் மின் உற்பத்தி செய்யப் போகிறோம் என்ற அடிப்படையில் புதிய அணையை கட்ட கேரள அரசு முயற்சிக்கிறது. மேலும் மராமத்து பணி செய்ய அனுமதியை தமிழக அரசுக்கு கேரள அரசு தர மறுக்கிறது.
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் 136 அடியில் இருந்து 142 அடியாக தேக்கி கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை மாபெரும் சட்டப்போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தில் அம்மா பெற்றுத் தந்தார்கள். அதனை தொடர்ந்து 152 அடியாக உயர்ந்து காட்டுவேன் என்று அம்மா அவர்கள் சூளுரை செய்தார்கள். அதனைத் தொடர்ந்து கடந்த அம்மா ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை அக்கரை செலுத்தி முன்னாள் முதலமைச்சர்கள் ஓபிஎஸ் இபிஎஸ் தமிழக உரிமையை பாதுகாத்தார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
தற்போது கேரள அரசு புதிய அணை கட்ட முயன்று வருகிறது. ஆனால் தமிழகத்தின் இத்துறையின் மூத்த அமைச்சர் தனி அக்கறை செலுத்தவில்லை. மேலும் முதலமைச்சர் முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து வாய் திறக்காதது கவலை அளிக்கிறது. எதிர்கால சந்ததியினர் வாழ்வாதாரம் தான் இந்த முல்லை பெரியாறு ஆகும், விளைநிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தென் மாவட்ட மக்கள் விவசாயிகள் அதிக கவலை கொண்டுள்ளனர். ஆகவே, விவசாயிகளை காப்பாற்றிடவும் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை நிலைநாட்டிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறையில் பல விருதுகளைப் பெற்றுத் தந்தது மட்டுமல்லாது, மத்திய அரசின் மூலம் பல்வேறு விருதுகளைப் பெற்றுத் தந்து 38 மாவட்டங்களில் குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகளையும், கிராம இணைப்பு சாலைகளையும் உருவாக்கி உள்ளாட்சித் துறையில் அமைச்சராக எஸ் பி வேலுமணி சிறப்பாக செயல்பட்டார்.
தற்போது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நடவடிக்கையில் அரசு செயல்பட்டு வருகிறது. தேர்தல் காலத்தில் 534 தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர். அதன் மீது அக்கறை செலுத்தினால் மக்கள் வரவேற்பு அளிப்பார்கள், ஆகவே அரசியல் காழ்புணர்ச்சியை விட்டுவிட்டு மக்கள் மீது அரசு முழு அக்கறை செலுத்த வேண்டும். நிச்சயம் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சட்டரீதியாக எதிர்கொண்டு குற்றமற்றவர் என்று நிரூப்பிபார் என்று கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu